Actor suriya

நடிப்பிற்காக தங்களை சிலர் வருத்திக்கொண்டு இருக்கிறார்கள்.சில படத்திற்காக சிலர் தங்கள் உடலை வருத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வரிசையில் இருப்பவர் தான் நடிகர் சூர்யா.தற்போது நடிகர் சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் சூர்யாவின் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் முடிந்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 43 வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

Actor suriya

இப்படம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதை இருக்கும் என அம்சமாக சொல்லப்பட்டு வருகிறது.1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்னும் படம் மூலம் சினிமா திரையில் கால் தடம் பதித்தார்,மேலும் இவர் அப்படத்திற்கு பிறகு வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.பூவெல்லாம் கேட்டுப்பார்,பிரிஎண்ட்ஸ்,ஸ்ரீ,மௌனம் பேசியதே,பிதாமகன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Actor suriya

நடிகர் சூர்யா அவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.36 வயதினிலே,விருமான் பசங்க 2,கடைக்குட்டி சிங்கம்,உறியடி 2,ஜாக்பாட் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்கள் தனது ரசிகர்களுடன் எடுத்துக்க்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் உடல் எடை குறைத்து வேறு மாதிரியான லுக்கில் காணப்பட்டார்.சூர்யா அவர்கள் சூர்யா 43 படத்திற்காக தனது எடையை குறைத்து விட்டாரா என ரசிகர்கள் பலரும்t தங்களது கருத்துக்களை பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Actor suriya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here