காமெடி கலந்த அரசியல் வசனங்களுக்கு பெயர் போன நடிகர் விவேக் தன் நிஜ வாழ்க்கையிலும் திரைப்படத்தில் பிரதிபலிப்பது போலத் தான். சமூக வலைத்தளங்களை நல்ல வழியில் அதிகம் பயன்படுத்தும் விவேக் சமூக கருத்துக்களை கூறுவதற்காகவும் தனது அப்டேட்ஸ்களை வெளியிடுவதற்காகவும் பயன்படுத்துகிறார்.
அப்படி சமீபத்தில் விவேக் வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று ரசிகர்கள் பிரபலங்கள் என பலரது கவனத்திற்கும் செலுத்தப்பட்டு அவரது புதிய லுக்கிற்கு பலரும் பாராட்டி வந்தனர். அவரும் அவருக்கு புதிய லுக் அளித்த கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். பல வெற்றிப்படங்களில் காமெடிகளுக்கு சொந்தக்காரரான விவேக் 18 வருடங்கங்களுக்கு முன் ரன் திரைப்படத்தில் விவேக் தன் அப்பாவை இழிவு படுத்துவது போல் நடித்திருப்பார்.
அதை ஒருவர் டப்ஸ்மாஷ் செய்திருப்பதை கண்ட ரசிகர் ஒருவர் “எனக்கு விவேக் அவர்கள் மீது நடிகனாகவும் இயற்கை ஆர்வளராகவும் மிக்க மரியாதை உண்டு! ஆனால், இதுபோன்று பெற்றொரை இழிவு படுத்தும் அவரின் சில காமெடிகளை சகித்துக்கொள்ள முடியவில்லை! இது அவர் மீதான என் விமர்சனம் இல்லை! என் தனிப்பட்ட கருத்து! மூடநம்பிக்கை மீதான அவரின் கருத்துக்கள்!”என்று மனம் நோகாத படி விவேக்கிற்கு அறிவுரை கூறி இருப்பார்.
அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு விவேக் அவருக்கு “பெற்றோரை இழிவு படுத்திய காரணத்தால் கடைசியில் கூவத்தில் விழுந்து கிட்னி இழந்து தெருவில் குஷ்ட ரோகி பிச்சைக்காரனுடன் படுத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுவே முடிவு கருத்து!” என அவரது பதிலை அளித்துள்ளார்.
பலரும் இது போன்ற கமெண்ட்ஸ்களை கண்டுகொள்ள கூட நேரமில்லாமல் சுற்றித் திரியும் இந்த காலத்தில் படத்தின் மூலம் எடுத்துகாட்டு சொன்னவருக்கு படத்தின் மூலமே நல்லதொரு தீர்வை சொல்லி அழகான கருத்தையும் பதிவு செய்து உள்ளீர்கள் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
எனக்கு @Actor_Vivek அவர்கள் மீது நடிகனாகவும் இயற்கை ஆர்வளராகவும் மிக்க மரியாதை உண்டு! ஆனால், இதுபோன்று பெற்றொரை இழிவு படுத்தும் அவரின் சில காமெடிகளை சகித்துக்கொள்ள முடியவில்லை! இது அவர் மீதான என் விமர்சனம் இல்லை! என் தனிப்பட்ட கருத்து! மூடநம்பிக்கை மீதான அவரின் கருத்துக்கள்👌👍! https://t.co/UK2OK2lDYv
— செந்தில் குமரன்! 🇰🇬#நாம்தமிழர்💪 (@SKumarPTM) February 25, 2020
பெற்றோரை இழிவு படுத்திய காரணத்தால் கடைசியில் கூவத்தில் விழுந்து,ஒரு கிட்னி இழந்து, தெருவில் குஷ்ட ரோகி பிச்சைக்காரனுடன் படுத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுவே முடிவு கருத்து https://t.co/CzWMUMEkhV
— Vivekh actor (@Actor_Vivek) November 16, 2020
பெற்றோரை இழிவு படுத்திய காரணத்தால் கடைசியில் கூவத்தில் விழுந்து,ஒரு கிட்னி இழந்து, தெருவில் குஷ்ட ரோகி பிச்சைக்காரனுடன் படுத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுவே முடிவு கருத்து https://t.co/CzWMUMEkhV
— Vivekh actor (@Actor_Vivek) November 16, 2020