அர்ச்சனா சுரேஷ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து நான்காம் சீசன் நடந்து வரும் நிலையில் இந்த சீசன் பலருக்கும் மற்ற சீன்களை விட கொஞ்சம் சுவாரசியமாக அமைந்துள்ளது. முதல் நாளில் 16 போட்டியாளர்கள் அதன் பின் வைல்ட் கார்டில் 2 போட்டியாளர்கள் என 18 போட்டியாளர்களை கொண்டு நடந்து வந்த இந்நிகழ்ச்சி ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு குறைந்த வாக்கினால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதில் கடைசியாக வெளியேற்றப்பட்ட ௯௦ஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் ரசிகர்கள் பலரின் மனதையும் வென்றிருந்தார். ஆட்டம் முதலில் நன்றாக சூடு பிடிக்கும் படி ஆரம்பித்த சுரேஷ் சக்ரவர்த்தி வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனாவை கொண்டு கொஞ்சம் பின் வாங்க ஆரம்பித்தார். இருப்பினும் அர்ச்சானாவிடம் நல்ல உறவை மேற்கொண்டு வந்த சுரேஷ் 5-ம் வாரத்தில் அர்ச்சனா சமைக்கும் உணவை மறுத்து வந்தார்.

bigg-boss-tamil-4

அதன் பின் அந்த வாரத்தின் கடைசியில் வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மீடியாக்களிடம் கொடுத்த பேட்டியில் அர்ச்சனாவை பற்றி பல செய்திகளை வெளிப்படையாக கூறி வந்தார். இதற்கு ரசிகர்களும் வரவேற்பு கொடுத்து வந்தனர் இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தோசை சண்டை ஒன்று பிக் பாஸ் வீட்டினில் அரங்கேறி உள்ளது. நாம் அனைவரும் அதை கவனித்திருப்போம்.

அதனை கவனித்த சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களும் தற்பொழுது தன் சமூக வலைத்தள பக்கத்தில் அர்ச்சனாவுக்கு எதிராக தொடர்ந்து டிவீட்களை போட்டு வருகிறார். தோசைக்கு மாவு தான் அரைக்கணும் அர்ச்சனா ஆளையே அறைக்குது கையிலயே கரண்டி வெச்சிருக்கிறவங்க எல்லாம் அன்னப்பூரணி ஆகமுடியாது என பல வரிகள் மூலம் அர்ச்சனாவை கலாய்த்து வருகிறார்.

இதே பிரச்சனை பிக் பாஸ் வீட்டினுள் ஆரி மற்றும் அச்சனாவிற்கு வந்த பொழுது அர்ச்சனாவுக்கு சோம்பு தூக்கிவிட்டு இப்போ வீட்டை விட்டு வெளியவந்த பின்னர் அர்ச்சனாவை இப்படி சொல்லுறீங்க என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான பதில் இன்னும் சுரேஷ் கூறவில்லை. ஆக மொத்தம் சுரேஷ் உள்ள இருந்தாலும் சரி வெளில இருந்தாலும் சரி செம என்டேர்டைன்மெண்ட் தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here