நாடெங்கும் மக்கள் கொண்டாடும் திருவிழாவான தீபாவளி சாமானிய மக்கள் முதல் மிகப் பெரிய பிரபலங்கள் வரை ஏற்ற தாழ்வு இன்றி ஒற்றுமையாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்து இந்த இனிய நாளை இனிதுடன் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் தங்கள் தீபாவளி உடையுடன் புகைப்படங்களை வெளியட்டு வருகின்றனர் அந்த வகையில் தேவதை ஒன்று ஆடை அணிந்து வந்தது போல் நடிகை வாணி போஜன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை வாணி போஜன் பற்றி பெரிய அளவில் நமக்கு அறிமுகம் தேவை இல்லை. ஊட்டியில் பிறந்து மாடலாக பணியாற்றி வந்த வாணி போஜன் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தெய்வ மகள்” சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதில் அவர் கதாநாயகியாக நடித்திருந்த சத்யா கதாபாத்திரம் வாணி போஜன் அவர்களுக்கு மிகப் பெரிய பெயரை சம்பாரித்து கொடுத்தது.
இன்னமும் கூட நடிகை வாணி போஜன் அவர்களை சத்யாவாகத் தான் தெரியும். ஒரே சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற வாணி போஜன் அதன் பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான “லட்சுமி வந்தாச்சு” என்ற சீரியல் நடித்து அதையும் வெற்றியடைய செய்து சின்னத்த்திரையை விட்டு வெள்ளி திரைக்கு முன்னேறினர். இவர் தெய்வ மகளுக்கு முன்பு மாயா, ஆஹா போன்ற சீரியலில் நடித்திருந்தாலும் எதிர் பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
வெள்ளித்திரையிலும் மூன்று படங்களுக்கு மேல் தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இந்த ஆண்டு முதலில் வெளியான ஓஹ் மை கடவுளே திரைப்படம் தான் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சின்ன திரை வெள்ளி திரை என இரண்டிலும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள வாணி போஜன் அவரை உற்சாக படுத்த தீபாவளி ஆடையுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைக்கண்ட இளைஞர்கள் பலரும் அவர் மீது பித்து பிடித்து அலைகின்றனர்.