Som Love controversy

பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான டாபிக் காதல் தான். கடந்த மூன்று சீன்களிலும் காதல் மலர்ந்த நிலையில் இந்த சீசனை மட்டும் விட்டுவைக்குமா? இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பாலா-ஷிவானி, சோம்-ரம்யா ஒரு வேலை காதலில் விளக்குவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற சூச்சி ரசிகர்களின் சந்தேகத்திற்கு ஏற்றபடி அவரும் ஏதாவது காதல் மலர்கின்றது என்பதை கவனித்து வருகிறார்.

நேற்று பிக் பாஸ் வீட்டில் சூச்சி மற்றும் சனம் கலந்துரையாடும் பொழுது காதல் புறாக்களை பற்றியும் விவாதித்னர் அப்பொழுது சோம் உண்மையில் விரும்புவது சாம் அவர்களைத் தான் ரம்யாவை அல்ல என்று சூச்சி கூறியுள்ளார். மேலும் பாலா மற்றும் ஷிவானி காதலை பற்றி பாலாவிடம் கேட்டால் அப்படி ஏதும் இல்லையென்று மறுத்துவிடுகிறார் எனவும் சூச்சி சனமிடம் பேசியுள்ளார்.

Suchi about Som

ஆனால் சோம் சம்யுக்தாவை விரும்புவது உறுதி எனவும் இந்த பேச்சு தான் எங்கள் குரூப்பில் அதிகப்படியாக ஆலோசிக்கப்படும் டாபிக் எனவும் சூச்சி சனமிடம் கூறியது நேற்று வெளியிடப்பட்டது. இதைக் கேட்ட ரசிகர்களுக்கு சூச்சி ஆரம்பத்திலேயே இருந்து எதிர் மறையாக பண்ணுவது போல் இதுவும் ஒரு தந்திரமாக இருக்குமா என்ற சந்தேகப்படுகிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் சோம் நடவடிக்கைகளை பார்த்தாலும் இவர் சம்யுக்தாவை விரும்புவது போல் தோற்றமளிக்க தான் செய்கின்றது. குறிப்பாக அந்த கம்பத்தை சுற்றும் டாஸ்க்கில் சோம் சுலபமாக ஜெயிக்க வாய்ப்பிருந்ததும் வேண்டுமென்று விட்டு கொடுப்பது போல் தெரிந்தது. ஆகா மொத்தம் பிக் பாஸ் வீட்டில் எப்பொழுது எதிர் பராததை தான் எதிர் பார்க்கணும் போல. இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ? பொறுத்திருந்து பாப்போம்!

Som in Bigg Boss

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here