சினிமாவில் மாநிறமாக இருந்தாலும் சாதிக்க முடியும் என்பதை நமக்கு எடுத்துரைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகர்கள் நடிகை என்றாலே சொகுசாக வாழ்பவர்கள் என்ற எண்ணம் நம் பலருக்கும் உண்டு. அப்படித் தான் ஐஸ்வர்யா ராஜேஷும் சொகுசாக இருப்பார் என்று நம் பலரும் நினைத்திருந்த நிலையில் அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி நாம் அறியும் பொழுது கண்களில் கண்ணீரை ஏற்படுத்துகிறது.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தன் ௧௧ ம் வகுப்பு முதலே வேளைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். சிறு சிறு கடைகளில் மாடலிங் செய்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத் திரையில் அறிமுகமானார் அதைத் தொடர்ந்து பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதன் பின் நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி பலருக்கும் வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
௩ அண்ணன்களை கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் 8 வயதில் தன் தந்தையை இழந்ததாகவும் 12 வயதில் தன் மூத்த அண்ணனை இழந்ததாகவும் 14 வயதில் தன் இரண்டாவது அண்ணனை இழந்ததாகவும் கூறி மேடையில் அனைவர்க்கும் மத்தியிலும் கண் கலங்கினார். மேலும் அந்த தடைகள் எல்லாம் உடைத்தெறிந்து முன்னேறி வந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் வளர்ச்சி பல பெண்களும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த காணொளி உங்க பார்வைக்காக!