தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கிடைக்காத வெற்றி துணைக் கதாபாத்திரத்தில் நடிகை அமிர்தா ஐயர் அவர்களுக்கு கிடைத்தது. 8 ஆண்டுகளாக இந்தியா சினிமாவில் தோன்றி வரும் அமிர்தா ஐயர் முதல் 4-ங்கு வருடங்கள் கவனிக்கப்படாத கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். அதன் பின் கதாநாயகியாக தோற்றமளித்த அமிர்தா பிகில் படம் மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே பிடித்தார்.

பெங்களூரில் பிறந்த அமிர்தா ஐயர் அவர்களுக்கு முதல் படம் மலையாளத்தில் அமைந்தாலும் அவர் அதன் பின் நடித்த முக்கால் வாசி திரைப்படங்கள் தமிழில் தான். தன சேகரன் இயக்கத்தில் விஜய் யேசுதாஸ் நடிப்பில் 2018-ம் படைவீரன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அமிர்தா ஐயர் அவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்தார்.

Amirtha Aiyer Amirtha Aiyer

அதன் பின் அவர் விஜய் ஆன்டனி நடித்த காளி திரைப்படத்தின் தென்மொழி கதாபாத்திரம் ஒரு அளவிற்கு வரவேற்பை தந்தது. இருப்பினும் அடுத்தாக அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. பெண்கள் கால் பந்து விளையாட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அமைந்த இத்திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் அமிர்தா நடித்திருப்பார்.

மொத்த அணிக்கும் கேப்டனாக இருக்கும் தென்றலின் சிரிப்பு இளைஞர்களின் மனதில் தென்றல் அடிப்பது போல் இருந்தது. கதாநாயகன் கதாநாயகியை விட அமிர்தா ஐயர் பெரிய அளவில் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். அவர் தற்பொழுது வெளியிடும் ஹோம்லியான புகைப்படங்கள் இது வரை அமிர்த ஐயர் வலையில் சிக்காத ரசிகர்களை கூட சிக்க வைக்கும் படி அமைந்து வருகின்றது!

அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு Perfect Wife Material என ரசிகர்கள் வருணித்து வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை அமிர்தா ஐயர் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Amirtha Aiyer Amirtha Aiyer Amirtha Aiyer

 

View this post on Instagram

 

A post shared by Amritha – Thendral (@amritha_aiyer) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here