பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை விட சற்று வித்தியாசமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. மற்ற சீன்களில் முதல் அல்லது இரண்டாவது வாரத்திலேயே நல்லவர் யார் கேட்டவர் யார் என்பதை ஒரு அளவிற்கு கணித்த ரசிகர்கள். இந்த சீசனில் நல்லவர் யார் கேட்டவர் யார் என்பதை கணிக்கவே முடியாத அளவிற்கு அமைந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆரம்பிக்கும் பொழுது இதில் பங்குபெற்றுள்ள ஆட்கள் சீசன் 3 யில் இருந்த ஆட்கள் போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது ஆதலால் இந்த சீசனில் கடந்த 3 சீசன்கள் போல சுவாரசியம் இருக்காது என பேசப் பட்டு வந்தது. ஆனால், அந்த கேலிப்புகளை எல்லாம் இந்நிகழ்ச்சி தவிடு பொடியாக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.
முதல் வாரத்தில் கெட்டவர்களாக தெரிந்த சுரேஷ் மற்றும் பாலா தற்பொழுது நல்லவர்களாக தெரிகிறார்கள். மிகவும் நல்லவர்கள் என்று நினைத்த ரியோ ராஜ் நிஷா அனிதா போன்றோர்களின் முகத்திரை அவிழ்ந்து அவர்களது உண்மை முகம் வெளிப்பட்டு வருகின்றது. சம்பந்தமே இல்லாமல் முன் கோவமாகி கத்தும் ரியோவை பலரும் வெறுத்து வருகின்றனர். அதேபோல் மற்றவர்களை சண்டை இழுக்கும் அனிதாவின் குணமும் பலருக்கும் பிடிக்கவில்லை.
அப்படி இருக்கையில் நிஷா மற்றும் வேல் முருகன் தனது உண்மை முகத்தை காட்டாமல் மற்றவர்களுக்கு பாசம் என்ற பெயரில் அல்வா கொடுத்து வந்தனர். அதை கவனித்த பாலா தற்பொழுது நிஷா மற்றும் வேல் முருகனுக்கு கொளுத்தி போட்டுள்ளார் அதன் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. உங்கள் பார்வைக்காக இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது!!
இதில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் வேல் முருகன் மற்றும் நிஷா இடையில் பற்றவைத்த பட்டாசு தற்பொழுது நன்றாக பிடித்து சர வெடியாக மாறி உள்ளது. பொதுவாக இது போன்ற செயல்களில் மொட்டை தாத்தா சுரேஷ் அவர்கள் தான் ஈடுபடுவர் ஆனால் இந்த முறை தாத்தா பண்ற வேலைய பேரன் பண்ணிட்டான் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த வர முடிவை பொறுத்தவரை பிரபல நடிகை ரேகா அவர்கள் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு மக்களின் வாக்குகள் கம்மியாக பெற்று வீட்டினை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரத்திற்கான நாமினேஷனலில் ஆரி சுரேஷ் ஆஜீத் உள்ளிட்டோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழு விவரம் இன்றைய எபிசொட்டில் தெரிய வரும்!