சன் மியூசிக் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமானவர் காஜல் பசுபதி. இவர் ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வசூல்ராஜா எம்பிபிஎஸ், சிங்கம் கௌரவம், மௌனகுரு,கலகலப்பு 2, கோ உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நடிகையாக காமெடி, வில்லி ரோல்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த காஜல் பசுபதி, 70வது நாள் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார் காஜல் பசுபதி. சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில் தற்போது தனக்கு இரண்டாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது என கூறி தனது திருமண புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
காஜல் பசுபதிக்கும், டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அதற்கு பிறகு இரண்டாவதாக சாண்டி மாஸ்டர் காதல் திருமணம் செய்து கொண்டு மனைவி, இரு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். தற்போது சாண்டியும், காஜலும் குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு தெரியாமல் சாண்டியும் காஜலும் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் இருவரும் நல்ல நட்புடன் இதுவரை இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது காஜல் மணக்கோலத்தில் யாரோ ஒருவர் அவருக்கு தாலிகட்டுவது போன்ற பழைய புகைப்படம் ஒன்றில் அவரை மட்டும் கட் செய்து பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த பதிவுக்கு கேப்ஷனாக “இனி என்னை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறன்.
திடீரென முடிவு எடுத்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே” என குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.