தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிம்பு.இவர் இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்தர் மகன் என்பது குறிப்பிடித்தக்கது.நடிகர் சிம்பு அவர்கள் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமா துறையை கலக்கி வருகிறார்.சமீபத்தில் கூட சிம்பு நடித்து வெளியான ஈஸ்வரன் படம் கூட பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடித்து இருந்தார்.மாநாடு படத்தில் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.இப்படமானது பல பிரச்சனைகளை தாண்டி வெளியானது.
மேலும் இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்சஷன்,எஸ் ஜே சூர்யா,பிரேம்ஜி என பலர் நடித்து உள்ளார்கள்.நீண்ட இடைவேளிக்கு பிறகு மாநாடு படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து இருந்தார்.தற்போது சிம்பு அவர்கள் bb அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.
நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சை மன்னன் என்று சினிமா துறையில் சொல்லும் அளவிற்கு பல பிரச்சனைகள் கிளம்பி இருக்கிறது.தற்போது தான் சிம்பு அவர்கள் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கிறார்.அவர் அமைதியாக இருந்தாலும் பல பிரச்னைகள் அவரை விடுவதாக தெரியவில்லை அவரை விடாமல் துரத்துகின்றன.எதோ ஒரு பிரச்சனையில் சிம்புவின் பெயர் வந்து விடுகிறது.இவரின் திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகள் கிளமபி வருகிறது. சிம்புவின் திருமணம் குறித்து ஜெய் என்ன சொன்னார் என்றால் தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ளாத நடிகர்கள் பட்டியலில் சிம்பு பெயர் முதலில் தான் இருக்கும் என்று கூட சொல்லலாம்.சிம்புவின் திருமணம் பற்றி எதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கும்.சமீபத்தில் கூட ஜெய் அவர்கள் கூட சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என கூறி இருந்தார்.
இப்படி இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் தங்கை நடிகர் சிம்புவை பல வருடங்கள் காதலிப்பதாக இருக்கும் செய்தி சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இத்தொடர் ஆரம்பத்தில் இருந்தே தற்போது வரை விறுவிறுப்பாக மற்றும் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது ஓடிக்கொண்டு இருக்கிறது.இத்தொடரில் ஐஸ்வர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் தான் சாய் காயத்ரி.இவருடைய தங்கை தான் மதுரா.இவரும் சின்னத்திரையில் பிரபலமாக நடிகையாக திகழ்கிறார்.அண்மையில் இவர் நடிகை சிம்புவை காதலித்து குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அவர் அதில் கூறி இருப்பது பள்ளி படிக்கும் போதே சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல் கேட்டு கொண்டே இருக்கும் போதே சிம்பு மீது காதல்வயப்பேடேன் என கூறியுள்ளார்.அப்போதே சிம்பு மேல் எனக்கு இரு க்ரஷ்.அதன் பிறகு அந்த படம் தம் என்றும் சிம்புவின் பெயரை கண்டு பிடித்தேன்.
அப்போதிலிருந்தே சிம்புவை நான் ஒரு தலையாக காதலித்து வருகிறேன் என்றும் சிம்புவை நேரில் பார்த்தால் உடனடியாக ப்ரொபோஸ் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.சிம்புவை ப்ரொபோஸ் செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.மேலும் சிலர் இந்த விடீயோவிற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கமெண்ட் களை குவித்து வருகிறார்கள்.