பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்தபோதிலும் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற உண்மையை இதுவரை வெளியிடவில்லை. பல ஊடகங்களில் அதைப் பற்றி பேசப்பட்டாலும் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 யில் பங்கேற்று சிறப்பாக விளையாடி இரண்டாம் பரிசை பெற்ற பாலாஜி பிக் பாஸ் குரலுக்கான சொந்தக்காரரை பற்றி ஒரு துப்பு கொடுத்துள்ளார்.
இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்த அமித் பார்கவ தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்ற செய்தி சமூக வளைத்தளங்களில் பரவி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அதை அமித் முற்றிலும் மறுத்தார். அவரைத் தவிர்த்து வேறு யார் என்ற குழப்பமும் கேள்வியும் ரசிகர்களின் மத்தியில் இதுவரை உலாவிக் கொண்டு தான் இருக்கின்றது.
View this post on Instagram
எப்பொழுது பிக் பாஸ் அவர்கள் போட்டியாளர்களுடன் நல்ல உறவை உருவாக்கி கொள்வது வழக்கம் தான் அப்படி இந்த சீசனில் பிக் பாஸ் பாலாஜியை பிக் பாஸ் தம்பி என்று அழைத்து நம் அனைவர்க்கும் அறியப்பட்டவை. அந்த வகையில் பிக் பாஸ் ப்ரோமோ எடிட்டர் புகைப்படத்தை பாலாஜி ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் பிக் பாஸ் குரலுக்கு டப்பிங் செய்யும் நபரின் சமூக வலைத்தள பக்கத்தில் அண்ணா என்ற கமெண்டை பதிவிட்டுள்ளார்.
இதை ஆராய்ந்த ரசிகர்கள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் நடிகர் மற்றும் பாடகரான சாசோ தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக் காரர் என்ற உண்மையை அறிந்துள்ளனர். மேலும் அவர் பக்கத்தில் சாசோ பேசப்பட்டிருக்கும் சில காணொளிகளில் அதன் சாயல் தெரிவதால் அவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்கர் என்ற உண்மையை அறிந்து ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். அவரது புகைப்படம் உங்கள் பார்வைக்காக!
View this post on Instagram