இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் செம ஹிட்டான படம் தான் சந்திரமுகி.

இப்படத்தில் ரஜினி,ஜோதிகா,பிரபு,நயன்தாரா,வடிவேலு,நாசர் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

மேலும் இப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரிகர்திஷா.இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில காட்சிகள் நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும் நட்சத்திரங்கள் பலர்.

சந்திரமுகி படத்தில் அதிந்தோம் பாடலில் அழகிய குழந்தை தான் பொம்மியை யாராலும் மறக்க முடியாது.அந்த பாடலில் பொம்மி சிறுமி ரஜினியுடன் சேர்ந்து அந்த பாடலில் சில காட்சிகளில் மட்டுமே ஆடி,பாடி இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளார்.

சந்திரமுகியில் பொம்மியின் உண்மையான பெயர் பிரகர்திஷா.இவர் தொடர்ந்து சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.மேலும் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். பிரதிக்ஷா அவர்கள் பிஎஸ்சி எலக்ட்ரானிக் படிப்பை முடித்துள்ளார்.
