Deiva magal actress usha got married

சன் டிவி, சீரியல்களை பொறுத்த வரை மற்ற தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும் பொழுது எப்பொழுதுமே ஒரு படி டாப் தான். கோலங்கள் முதல் சித்தி வரை பல நெடுத் தொடர்களை நமக்கு தந்துள்ள சன் டிவியின் மற்றொரு வெற்றி படைப்பு “தெய்வ மகள்” நெடுந்தொடர். அத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒருவருக்கு தான் திருமணம் முடிந்துள்ளது.

தெய்வ மகள் சீரியலில் மிகவும் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்றால் சத்யா, பிரகாஷ் மற்றும் அண்ணியார் தான். அதில் சத்யாவை பிரகாஷ் வலுக் கட்டாயமாக திருமணம் செய்து கொள்வது போல் கதையை சித்தரிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பா இல்லாத சத்திய குடும்பத்தினர் சத்யாவின் உதவி இல்லாமல் மிகவும் வறுமையில் சிக்கி கொள்வனர். அதில் சந்தியாவிற்கு தங்கைகளாக நடித்த இருவரில் இரண்டாம் தங்கை உஷாவிற்கு தான் தற்பொழுது திருமணம் நடந்துள்ளது.

Usha Sai

ஆந்திரவில் பிறந்து வளர்ந்த உஷா சாய் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதன் பின் தெய்வ மகள் சீரியல் மூலம் 2013-ம் ஆண்டு சின்ன திரையில் அறிமுகமான உஷா அதில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்பொழுது இவர் சக்தி அழகிய தமிழ் மகள் உட்பட பல சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் முதல் வாரத்தில் தனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்த உஷாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவருடன் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கள் முக்கிய நபர்களுடன் சிம்பிளாக நடந்த இத்திருமணத்திற்கு தெய்வ மகள் சீரியல் கலைஞர் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Usha Prakash Usha Prakash Usha Prakash mother

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here