Ethirneechal serial

நடிகை கனிகா பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு மனைவியாக நடிகை கனிகா ஒரு குடும்பப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவர் 2002 இல் 5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து இவர் தமிழ் படங்களை தவிர தென்னிந்திய படங்கள் அனைத்தும் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் தனது சாதனையை நடிப்பின் மூலம் தெரிவித்து இவ்வுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

வெள்ளத்திரையில் நடிகையாக வலம் வந்த இவர் பின்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்பத்து்டன் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மனைவியாக நடித்து வருகின்றார். தனது கம்பீரமான பேச்சினால் அசத்தி வரும் இவர், பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.


நடிகை கனிகா, கடந்த 2008ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெள்ளித்திரையிலும் நடிப்பதற்கு தயாராக உள்ளார்.


ஆட்டோ ஓட்டும் கனிகா சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் இவரின் மாடர்ன் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றது.இந்நிலையில் கனிகா வெளியிட்டுள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது மாடர்ன் உடையணிந்து ஆட்டோ ஓட்டும் காட்சியை வெளியிட்டுள்ளார்.மேலும் கைவசம் இன்னொரு தொழில் இருக்குது என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். கனிகாவின் இக்காட்சியினை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here