தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன்.இவர் தனது தனித்துவமான நடிப்பினால் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் வரவேற்பை பெற்றவர்.இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.நடிப்பிற்கான அனைத்தையும் கற்றுக்கொண்டு தனக்கென்று ஒரு வாய்ப்பினை தேடி அலைந்தார்.இவர் 1982 ஆம் ஆண்டு காக்கஎன்னும்படம்மூலம்மலையாளசினிமாதுறையில்அறிமுகமானார்.பிறகு தமிழில் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்னும் தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என அணைத்து மொழி படங்களில் நடித்து உள்ளர்.இவரது முதல் படமான ஏழாவது மனிதன் படத்தின் மூலம் தனது முதல் படத்திலையே ரசிகர்களை கவர்ந்தார்.ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு பல படங்களில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது பிறகு இவருக்கு அடுத்தடுத்து வில்லன் கதாப்பத்திரம் தான் கிடைத்தது.
வில்லன் என்றால் ஒரு தோற்றம் அனைவரது மனதிலும் இருந்தது.அனால் அதனை ஒட்டு மொத்தமாக உடைத்தவர் தான் நடிகர் ரகுவரன்.இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.பாட்ஷா படத்தில் மார்க் அன்டோனியாக நடித்து அனைவரையும் மிரட்டினார்.இன்று வரை பாட்ஷா படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தை ரகுவரனை தவிர வேறு யாராலும் செய்து இருக்க முடியாது.
நடிகர் ரகுவரன் நடிகை ரோஹிணியை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவ்ரகள் இருவருக்கும் 1998 ஆம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகன் பிறந்தார்.2004 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பினால் பிரிந்து விட்ட நிலையில் மகனும் தாய் ரோஹிணியுடன் சென்று விட்டார்.மகனின் பிரிவு ரகுவரனை அதிகமாகவே பாதிப்படைய செய்தது.
இந்நிலையில் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார் இவரின் இறப்பிற்கு காரணம் அதிகமான குடிப்பழக்கம் என்றுசமீபத்தில் தந்தை மகன் பெயரில் ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இசையின் மீது தான் ரகுவரனுக்கு அதிக படியான காதல் இருந்தது.அனால் காலத்தின் மாற்றத்தால் இவர் நடிப்பை தேர்ந்தெடுத்தார்.தற்போது ரகுவரனின் மகன் தந்தையின் அந்த ஆசையை நிறைவேற்றி வருகிறார்.தனது தாயுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.இவரை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக தனது அப்பாவை போல இருப்பதாக கூறியுள்ளார்கள். கூறப்பட்டாலும் உண்மையான காரணம் மகனை பிரிந்தது தான்.