குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்துடன் தாயகம் மற்றும் உளவு துறை படங்களில் நடித்தவர் ஜெனிஃபர்.சூப்பர் ஹிட் அன கில்லி.
விஜய் நடித்த இப்படத்தை பார்த்த எவருக்கும் அவரது தங்கை கேரக்டரை மறக்க முடியாது.அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.அவ்வாறு நடித்து பிரபலமானவர் தான் ஜெனிஃபர்.
கில்லி படத்தில் புவனா கேரக்டரில் நடித்து தனது குழந்தை தனமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை எளிதில் கவர்ந்து இருப்பார்.
மேலும் ஒக்கடு என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இது.கில்லி படத்தை இயக்கியவர் தரணி.குழந்தை நட்சத்திரமாக ஜெனிஃபர் அவர்கள் சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிப்ரவரி 14,தோழா,தீயா வேலை செய்யணும் குமாரு,கூட்டத்தில் ஒருவன், டிரிப்,மகா போன்ற பல்வேறு படங்கள் நடித்துள்ளார்.
33 வயதாகும் ஒருவர் சினிமாவில் 30 ஆண்டுகள் இடம் பெற்று இருப்பது ஆச்சரியமாக இருப்பது.சமீபத்தில் நடிகர் விஜயகாந்துடன் நடித்த படங்களின் போட்டோக்களை பதிவு செய்து இருக்கிறார்.