96 திரைப்படத்தை தமிழக ரசிகர்கள் பலராலும் மறக்கவே முடியாது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் நம் பள்ளி பருவ காதலை கணக்கச்சிதமாக எடுத்துரைத்திருக்கும். நமது பள்ளி பருவ காதலியின் முகத்தையே பிரதிபலிக்கும் படி சிறிய வயது ஜானுவாக இந்தத்திரைப்படத்தில் கௌரி என்பவர் நடித்திருப்பார்.
லட்சணமான முகம், அடக்கமான குணம், கலையாத முடி, மல்லிகை பூ, கொஞ்சமான சிரிப்பு அதிகமான அமைதி என நடிப்பில் பட்டையை கிளப்பிய கௌரிக்கு இது முதல் படம் என்றாலும் ரசிகர்களின் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார். திரைப்பிரபலங்கள் பலரும் இவரை பாராட்டி வந்த நிலையில் இவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் கொத்து கொத்தாக வருகின்றது. தற்பொழுது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப் படுகின்ற தளபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கேரளாவில் பிறந்திருந்தாலும் சென்னையில் அதிகமான வாழ்க்கையை செலவழித்த கௌரி இது வரை தமிழ் மலையாளமென 5 திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி இரண்டு திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளும் நடந்துகொண்டிருக்கிறது. “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படமான “கர்ணன்” திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
21 வயதே ஆகும் கௌரி 96 திரைப்படத்தில் நமது பள்ளி பருவ காதலியை நினைவு படுத்திவிட்டு தற்பொழுது சோசியல் மீடியாக்களில் போடும் பதிவின் மூலம் நம்மை ஏமாற்றி விட்ட முன்னாள் காதலியை ஞயாபக படுத்தி வருகிறார். படத்தில் எப்படி இருந்தாரோ அதற்கு மாற்றாக சோசியல் மீடியாவில் உள்ளார். அவரது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக! இருந்தாலும் இந்த அடக்க ஒடுக்கமும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு
View this post on Instagram