விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன். மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவரான இவர் நேற்று இரவு வீடு புகுந்து ரவுடிகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நாஞ்சில் விஜயன் தன் தனி திறமைகளை வெளிப்படுத்தி ஒரு சிறந்த காமெடியனாக உருவெடுத்தார். அதன் பின்னர் அது இது எது நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜி ராமருடன் கலக்கிய நாஞ்சில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Naanjil Vijayan

சமீபத்தில் வனிதா-பீட்டர் திருமண விவகாரத்தில் பெரிதும் பேசப்பட்ட சூரிய தேவிக்கும் நாஞ்சிலுக்கும் தொடர்பு உள்ளதாக நாஞ்சில் விஜயனை பற்றி செய்திகள் வெளியிட்ட வனிதா. அதன் பின்னர் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாக நாஞ்சில் விஜயன் மற்றும் சூரிய தேவி மீது போலீஸில் வழக்கு தொடுத்தார்.

அதனால் சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் விஜயன் “எனக்கும் சூரிய தேவிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் பல ஆண்டுகளுக்கு முன் அவளை சந்தித்தேன். மற்ற ரசிகர்கள் போல் என்னுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அவள் ஆசைப்பட்டதால் தான் நான் டிக் டாக் செய்தேன். அதைத்தவிர்த்து எந்த விதமான நட்பும் எங்களுக்குள் இல்லை. அவள் தொலைபேசி எண்ணைக்கூட தமிழிசை சௌந்தராஜன் பற்றி தவறாக பேசி சர்ச்சையை கிளப்பிய பொழுதே பிளாக் பண்ணிவிட்டேன். அதன்பின்னர் வனிதா திருமணத்தை பற்றி பேட்டி எடுக்கத்தான் அவருக்கு திரும்பவும் தொடர்பு கொண்டேன்.” என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

Vanitha Controversy picture Nanjil with Suriya Devi

எந்த தவறும் பண்ணாத என்மேல் எதற்கு புகார் என்று நாஞ்சிலும் வனிதாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கொண்டனர். அதன் பின் நாஞ்சில் விஜயன் சமாதானமாக போக தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக வனிதா தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சூரிய தேவி நேற்று இரவு ரவுடிகளுடன் சேர்ந்து விஜயன் வீட்டினுள் பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதனால் அடிப்பட்ட நாஞ்சில் சூரிய தன்னை கொலை முயற்சி செய்வதாக போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அத்தோடு நிறுத்திவிடாமல் மக்களுக்கு தெரியும் படி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். உங்கள் பார்வைக்காக

Suriya Devi

Nanjil Vijayan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here