நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் முதல் வாரத்திலேயே தனது குடும்பத்தை பற்றி கூறி ரசிகர்களின் கவனத்தை தன் வசம் இழுத்தார். இதனால் பாலாஜியின் உண்மை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி மூக்கை நுழைக்கும் மீடியாக்களும் நெடிசேன் களும் பாலாஜியை பற்றின பல உண்மைகளையும் அறிந்து வருகின்றனர்.

முதல் வாரத்தில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதையை பற்றி சக ஹவுஸ் மேட்ஸ் உடன் பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப் பட்டது. அதில் அனைவரும் பங்கேற்ற நிலையில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தன் பெற்றோர்கள் இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனவும் அவர்கள் என்னை மனதளவிலும் உடலளவிலும் மிகவும் துன்படுத்தியுள்ளார் என்று கூறி இருந்தார்.

Balaji Murugadoss

அதனை ஆராய்ந்த நெட்டிசன்கள் அவர் பீர் ஊற்றி குளிப்பது போன்ற சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாக பரப்பி வருகின்றனர். சரி அது கூட விளையாட்டாக செய்த வீடியோ என்று நினைத்தாலும் தற்பொழுது மற்றொரு சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகி வருகிறது. இதில் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 யில் பங்கேற்ற யாஷிகாவும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலாஜியும் யாஷிகாவும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி பாலாஜி மது அருந்திவிட்டு காரை ஒடிச் சென்று டெலிவரி செய்யும் நபர் பரத் மீது நுங்கம்பாக்கத்தில்  மோதினர். இதனால் போலீஸில் சிக்கிய பாலாஜி யாஷிகாவை உதவிக்கு அழைத்ததாகவும் அங்கு சென்ற யாஷிகாவை கண்ட சிலர் யாஷிகா தான் விபத்து செய்துள்ளார் என்ற செய்தியை மக்களின் மத்தியில் பரப்பி விட்டுள்ளனர்.

Balaji Murugadoss

இந்த செய்தியானது மாடல் வட்டாரத்தில் உள்ள ஜோ மைகேல் என்பவரிடம் இருந்து வெளியாகி உள்ளது. பாலாஜி மது போதைக்கு அடிமையனவர் என்றும் எனது நிறுவனத்தை பிராட் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியதற்காகவும் பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக ஜோ மைகேல் கூறியுள்ளார்.

பெரும்பாலான பிள்ளைகள் தன் பெற்றோர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றால் அவர்களும் அந்த பழக்கத்திற்கு கண்டிப்பாக அடிமை ஆகா மாட்டார்கள். ஆனால் இவர் தந்தை தாயை பழித்து விட்டு இவர் இப்படி செய்வது, ஒருவேலை இவர் பரிதாப ஓட்களுக்காக பிக் பாஸ் வீட்டினுள் இதெல்லம் செய்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் பலரின் மனதில் எழுந்துள்ளது. அவரது உண்மை முகம் வரும் காலங்களில் வெளிவரும். கமல் ஸ்டைல்ல சொல்லனும்னா “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!”

Balaji Murugadoss

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here