விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பல திறமைசாலிகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றது. அதில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் உருவான காமெடியன்கள் ஏராளம் அதில் விஜய் டிவி புகழும் ஒன்று. காமெடியனாக அனைவருக்கும் தெரிந்த புகழ் தற்பொழுது ஹீரோ போல் புகைப்படங்களை எடுத்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

பல தடைகளுக்கு பின் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகழ் அதில் தன் காமெடி திறன்களை வெளிப்படுத்தி மற்ற நிகழ்ச்சிகளான சிரிப்புட, சூப்பர் சிங்கர் போன்ற முன்னணி  நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற நிகழ்ச்சியில் அத்திபூத்தார் போல் எப்பொழுதாவது வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில் “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சியில் முழுநேர போட்டியாளராக பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்டது.

Vijay Tv Pugazh

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அளவில்லா காமெடி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களை தன் வசம் ஈர்த்த புகழுக்கு தற்பொழுது மிக பெரிய ரசிகர் பட்டாலேமே உருவாகி கொண்டு வருகின்றது. இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தற்பொழுது வந்த வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில் இவருக்கு தளபதி விஜய் நடித்து வெளியாக இருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் வாய்ப்பளிக்க பட்ட நிலையில் அவர் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்னரே சினிமாவுக்கு வருவேன் என்று கூறி மறுத்துவிட்டார்.

அந்த வளர்ச்சியில் ஈடுபட்டு வரும் புகழ் அவர்கள் தன்னை பற்றின செய்திகளை வெளியிட சமூக வலைத்தளத்தில் இணைத்துள்ளார். தொலைக்காட்சியில் தன் ரீ-அக்சன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் புகழ் சமூக வலைத்தளத்தில் வேற மாதிரி இருக்கின்றார். அதும் இப்பொழுது தனது சுருட்டை முடியெல்லாம் சரி செய்து ஒரு திரைப்பட வில்லன் போன்று காட்சியளிக்கிறார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் புகழை பாராட்டி வருகின்றனர். சிலர் அந்நியன் திரைப்பட ரெமோ போன்று தோற்றமளிக்கிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Vijay Tv Pugazh Vijay Tv Pugazh Vijay Tv Pugazh Vijay Tv Pugazh

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here