அறந்தாங்கி நிஷா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன் காமெடி வாழ்க்கையை தொடங்கிய அறந்தாங்கி நிஷா இதுவரை தன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் தவறியதே இல்லை. அனைவரிடமும் சகஜமாக பழகும் நிஷாவின் கல்யாண வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
பெண் காமெடியன் என்றாலே விறல் விட்டு என்னும் அளவிற்கு தான் தமிழ் சினிமாவில் நடிகைகள் உள்ளனர் அதில் அறந்தாங்கி நிஷாவும் ஒன்று தன் வெளித்தோற்றம் நிறம் போன்றவற்றுகளையும் பலரரும் கேலி செய்து காயப்படுத்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படிக்கல்லாக மாற்றி தற்பொழுது வளர்ந்து வருகிறார்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் வாய்ப்பு கிடைத்து தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ரோல்லில் காமெடி செய்ய தோன்றும் நிஷா அவர்கள் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் மாரி 2. இப்படி சிறப்பாக தன் வாழ்க்கையை பயணித்து செல்லும் பொழுது தற்பொழுது இவருக்கு விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்றதால் மக்களின் கவனம் அவர்மீது பாய்வதால் நிஷாவின் பல விடியோக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றின செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றான. அதில் ஒன்று தான் நிஷாவின் கல்யாண வீடியோ. தன் முறை மாமன் ரியாஸ் என்பவரை காதலித்து குடும்பத்தின் சம்பந்தத்தோடு திருமணம் செய்துள்ளார். ரியாஸ் மற்றும் நிஷா தம்பதி ஏற்கனவே மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரியாஸ் நிஷா தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதுவரை நிஷாவின் நிஜ திருமண வீடியோ பார்க்கத்தவர்களுக்காக அந்த வீடியோ இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது!
View this post on Instagram