ஆயிரம் வகையான திரைப்படங்கள் வந்தாலும் புது புது நிகழ்ச்சிகள் வந்தாலும் ரசிகர்களின் மத்தியில் மவுசு குறையாத ஒன்று தமிழ் சீரியல்கள் தான். ஏகப்பட்ட சீரியல்கள் பல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ரசிகர்களின் மனதை கவர்கிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் ஒன்றும்.
கிராமப்புறத்தில் இருந்து வந்த பார்வதி அகிலாண்டேஸ்வரி என்ற பணக்கார பெண்ணனின் வீட்டில் பணியாளராக சேர்வர். அங்கு அகிலாண்டேஸ்வரி மகன் கார்த்திக் பார்வதி மீது கொண்டதால் பார்வதிக்கு தன் வீட்டினரால் வரும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி அவருக்கு உதவிய நிலையில் அது இருதலைக் காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. ஒரு வேலைக்காரி பெண்ணுங்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்து விட்டது என சக வீட்டார்கள் பார்வதியை கொடுமை படுத்துவது தான் இந்த சீரியலின் சுருக்கமான கதை.
இந்த தொடரில் பல கதாபாத்திரங்கள் தோன்றி இருந்த நிலையில் ஐஸ்வர்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜனனி அசோக்குமார். கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2016-ம் ஆண்டு மாப்பிள்ளை என்ற தொடர் மூலம் சீரியலில் அறிமுகமானார். இவர் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் யூடூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் தன் ரசிகர்களுக்கு மேக் அப் அறிவுரைகளை அளித்து வருகிறார்.
அப்படி ரசிகர்களுடன் சாதாரணமாக கலந்துரையாட வந்த ஜனனி அவர்களுக்கு சில நிமிடங்களில் செம்பருத்தி சீரியல் தயாரிப்பாளர்களிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. அதை ஏற்று பேசிய ஜனனி அசோக்குமார் தன்னை செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த ரசிகர்களின் முன்பாகவே கதறி அழுதார்.
செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கியதற்கும் காரணத்தை ஜனனி கூறினார். அதை பற்றி அவர் கூறுகையில் “நான் இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறேன். அதனால் என்னால் சரியான நேரங்களில் செம்பருத்தி சீரியலுக்கு கால் சீட் கொடுக்க முடியவில்லை. அதனால் என்னை நீக்கி உள்ளனர். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை நான் என்னுடன் செம்பருத்தி சீரியலில் வேலைபார்த்த அனைவரையும் மிஸ் செய்வேன்!! நான் இல்லை என்றால் என்ன? நீங்கள் தினமும் செம்பருத்தி சீரியல் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என கண்ணீர் மழுக கூறினார்.
இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் இவர் சாதாரணமாக பிராங்க் செய்கிறார் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர் உண்மையில் நீக்கப்பட்டுள்ள செய்தி தற்பொழுது உறுதியாகி உள்ளது. இது செம்பருத்தி ரசிகர்கள் பலருக்கும் உறுதியாகி உள்ளது அதுமட்டுமின்றி அவர் ரசிகர்களின் முன் அழுத்தத்தால் ரசிகர்களின் மனம் சுக்குநூறாக உடைந்தது. ஒரு பெண் இப்படி கதறி அழுந்தால் யாருக்குத் தான் வலிக்காது?