சினிமா பிரபலங்கள் என்றாலே பல வதந்திகளிலும் கிசு கிசு செய்திகளிலும் சிக்குவது சகஜம் தான் ஆனால் இதுவரை பெரிய மீடியாக்கள் பேசும் அளவிற்கு காதல் திருமணம் போன்ற எந்த சர்ச்சைகளில் சிக்காத காஜல் அகர்வாலின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றன. அதில் காதலன் காஜல் அகர்வாலை மடியில் வைத்து கொஞ்சுவது போல் வெளிவந்ததால் ரசிகர்கள் மிக பெரிய ஷாக்கில் உள்ளனர்.
தெலுங்குவில் மிகவும் பிரபலமான நடிகை காஜல் அகர்வால் தமிழிலும் ஒரு அளவிற்கு புகழ் பெற்றவரே. தல, தளபதி போன்ற முக்கிய பிரபலங்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த “பழநி” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 15-ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்பொழுது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 திரைப்படமே இவரது கடைசி திரைப்படமாக இருக்கலாம் காரணம் இவரது திருமணம் தான். திருமணத்திற்கு பின் இவர் குடும்பம் குட்டியுமாக செட்டிலாக வாய்ப்புள்ளது என்பதால் தான்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கவுதம் என்பவரை வருகின்ற 30-ம் தேதி கொரோனா ஊரடங்கால் சிம்பிளாக திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக செய்தியை நேற்று காஜல் அகர்வால் தன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இவர்களின் திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயக்கப்பட்ட திருமணம் என்று பலரும் பேசி வந்த நிலையில். காஜல் அகர்வால் ஏற்கனவே அவருடன் தனியார் ஹோட்டலில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனை வைத்து பார்க்கும் பொழுது காஜல் அகர்வால் மற்றும் கவுதமிற்கு ஏற்கனவே தொடர்பு இருப்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஷாக் கொடுத்துள்ளது. இவர் எப்படி இது நாள் வரை தன் காதலனை மீடியாக்களின் கண்களிலிருந்து மறைத்தார் என்று தெரியவில்லை. இப்பொழுது வெளியாகி உள்ள புகைப்படங்கள்!!