தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக தொடங்கி தற்பொழுது தினமும் விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. மற்ற சீசன்களை போலவே 16 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியுள்ள இந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்களும் 8 பெண் போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்றுள்ள ரியோ, ரம்யா பாண்டியன், நிஷா, அனிதா சம்பத், ஆரி போன்ற பல பிரபலங்களை நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் பாலா, சோம், சம்யுக்த, சுரேஷ் சக்கரவர்த்தி போன்ற சில பிரபலங்களை நம்மால் அடையாளம் காண முடியவில்லை. அப்படி நாம் அடிக்கடி பார்க்கும் உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் தோற்றமளிக்கும் நடிகர் பிக் பாஸ் நிகழிச்சியில் பங்கேற்றுள்ளது உங்களால் அடையாளம் காண முடிந்ததா?
அதில் நடித்தவர் வேறு யாருமில்லை இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4-யில் பங்கேற்ற சோமசேகர் தான். தனக்கு எங்கு சென்றாலும் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசனிடம் புலம்பிய சோமசேகர் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி இருக்கின்றார். மற்ற போட்டியாளர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கும் இவர் இன்னும் எந்த விதமான பிரச்சனைகளிலும் சிக்கவில்லை.
ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் 2010-ம் ஆண்டு ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோமா சேகர் தற்பொழுது சினிமாவில் பங்கேற்பதற்கான அங்கீகாரத்திற்கே பிக் பாஸ்ஸில் பங்கேற்றுள்ளார். மாடலிங் மற்றும் நடிப்பை தாண்டி இவர் ஒரு பாக்சர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் பங்கேற்றவுள்ள சோமசேகர் 66-கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
குத்து சண்டைகளில் பங்கேற்கும் இவர் நெய் குழந்தை போல் நெய் விளம்பரத்தில் பங்கேற்றுள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் வேடிக்கையாக தான் உள்ளது. 30 வயதாகியும் திருமணம் செய்யாத இவர் பிக் பாஸ் வீட்டினுள் தனக்கான ஜோடியை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது.