Kamal Haasan Family

உலக மக்கள் பலரும் போற்றப்படும் கமல் ஹாசன் அவர்கள் ஒரு கலைஞராக சினிமா துறையில் பல சாதனைகளையும் படைத்துள்ளார். குழந்தை பருவம் முதலே குழந்தை கதாபாத்திரமாக தோன்ற ஆரம்பித்த கமல் அவர்கள் பல வெற்றி தோல்விகளுக்கு பின்னர் திறமை வாய்ந்த நடிகராக தமிழ் சினிமாவில் தோற்றமளித்தார். அவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாக தொடங்கினர்.

ஒரு கலைஞன் வளர வளர அவனது தனிப்பட்ட வாழ்க்கை முறைகளும் அவனது வாழ்வின் முக்கிய நாட்களும் ரசிகர்களின் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. அந்த வகையில் நேற்று (08/11/2020) கமல் ஹாசன் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அவருக்கென புகைப்படங்கள் அல்லது காணொளி சமர்ப்பித்து பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தனர்.

kamal-haasan

நேற்று சனிக்கிழமை என்றதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் ௪ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் அவர்களுக்கு போட்டியாளர்கள் உட்பட பல பிரபலங்களும் குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு நன்றி கூறிய கமல் ஹாசன் “நான் பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடுவதில்லை எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இருந்ததில்லை ரசிகர்களுக்காகவே இதனை கொண்டாடுகிறேன்!”

“எனது பிறந்த நாள் அன்று என் தந்தையார் எனக்கு மிகப் பெரிய பாடத்தை கற்பித்தார். காரணம், 90 களின் பொழுது என் பிறந்தநாளன்று என் தந்தை காலமானார். அதன்பின் தான் வாழ்க்கை பற்றின புரிதல் ஏற்பட்டது. அது மிகப் பெரிய பாடம்” என்று கூறினார். மறுபக்கம், கமல் பிறந்தநாள் அன்று மறைந்த பாடகர் எஸ் பி பி அவர்கள் அந்த நாள் முழுவதும் கமல் ஹாசனுடன் இருப்பாராம் ஆனால் இந்த முறை இல்லை என்று கமல் கூறி கண் கலங்கினார்.

உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு அவர் பிறந்தநாளன்று ஒரு பக்கம் பல வாழ்த்துக்கள் வந்தது மகிழ்ச்சி அளித்தாலும் இந்த இருவரின் இழப்பு அவரை மிகவும் பாதித்துள்ளது.

kamal-haasan-father-statue
Kamal and SPB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here