10 ஆண்டுகளுக்கு மேல் வெற்றியை கடந்த பிக் பாஸ் ஹிந்தியை தொடர்ந்து தென் இந்தியாவில் பிக் பாஸ் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் தொடங்கப்பட்டது. இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 3 சீசன்களை கடந்து 4 வது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் வீட்டினில் நடக்கும் சில எதிர்பாரத திருப்பாங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே பேசப்பட்டு எடுக்கும் நிகழ்ச்சி என்ற செய்தி பரவி வருகின்றது.

இது பேசி வைத்து எடுக்கப்படும் நிகழ்ச்சி இல்லை என்று அதன் தொகுப்பாளர் கமல் ஹாசன் பல முறை கூறியும் அதை ஏற்க சில ரசிகர்கள் மறுக்கின்றனர். இது சீசன் 1 முதலே பெரும் விவாதமாக போய் கொண்டிருக்கும் இந்த தலைப்பிற்கு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வையாபுரி அவர்கள் பிக் பாஸ் வீட்டில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அப்பட்டமாக போட்டு உடைத்துள்ளார்.

Vaiyapuri in Bigg Boss

2017-ம் ஆண்டு ஆர்மபித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4-யில் பங்கேற்ற வையாபுரி அவர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாண்டாலும் போகப் போக அவரின் குடும்பத்தின் ஞயாபகம் வந்து உடைந்து போனார். அதன்பின் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் சோகத்தில் மூழ்கிய வையாபுரி சக ஹவுஸ் மேட்ஸ்ஸால் நாமினேட் செய்யப்பட்டு குறைந்த வாக்குகளால் வெளியேற்றப்பட்டர்.

அதன் பின் பெரிய அளவில் சினிமாவிலும் மீடியாவிலும் தோன்றாத வையாபுரி சமீபத்தில் யூடூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் முழுக்க முழுக்க பிக் பாஸ் வீட்டில் செயல்படும் திட்டங்களை பகிர்ந்த வையாபுரி இது 100 சதவீதம் பேசப்பட்டு எடுக்கும் நிகழ்ச்சி இல்லை. சிறப்பாக விளையாண்டால் மட்டுமே அங்கு தப்பிக்க முடியும் அதேபோல் பிக் பாஸ் வீட்டில் இருப்பது எளிதல்ல டாஸ்க் முடிக்கவில்லை என்ற பச்ச தண்ணி கூட கொடுக்க மாட்டார்கள் என பல உண்மைகளையும் கூறியுள்ளார். அந்த காணொளி உங்கள் பார்வைக்காக!

மேலும் இவர் கூறியதை பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here