Satna Titus

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடிப்பில் ஆர்வம் காட்டி சில படங்களில் சுமாரான வெற்றிகளை கண்ட பின்னர் அவருக்கு நடிகராக திருப்புனை தந்த திரைப்படம் பிச்சைக்காரன். விஜய் ஆன்டனி தயாரிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடித்திருந்த சட்னா டைட்டஸ் என்பவரும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

கேரளாவில் பிறந்த சட்னா அவர்கள் 2015-ம் ஆண்டு “குரு சுக்கிரன் “என்ற லோ பட்ஜெட் தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்த சட்னா அதில் கிடைத்த வெற்றிக்கு பின் 2017-ம் ஆண்டு “எய்தவன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். 2018-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் டேபுட் செய்த இவர் ஆண்டிற்கு ஒரு திரைப்படமென நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சுதர் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளிவந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” என்ற திரைப்படம் தான்.

Satna Titus

சட்னாவின் சினிமா வாழ்க்கை மட்டுமின்றி திருமண வாழ்க்கையும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் இருந்து தான் ஆரம்பித்தது. பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆன்டனி நிறுவனம் தயாரித்திருந்தாலும் அதனை டிஸ்ட்ரிபூட் செய்தவர் கார்த்திக். அவருடன் காதல் வயப்பட்ட கதாநாயகி சட்னா அதே ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை ஒற்றுக்கொள்ளாத சட்னாவின் பெற்றோர்கள் கார்த்திக் அவர்களுக்கு எதிராக புகார் அளித்தனர்.

அதன் பின் காலம் கடக்க கடக்க மனம் மாறிய சட்னாவின் திருமணத்தை ஏற்று 2017-ம் ஆண்டு இருவருக்கும் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்பொழுது இவர்களுக்கு 3 வயது மகன் உள்ளார். சட்னா அவர்களுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையை பெற்றெடுத்திருந்தாலும் அவரின் முகத்தில் இன்னும் கதாநாயகி கலை போகவே இல்லை என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Satna Titus Satna Titus Satna Titus
Satna Titus Satna Titus Satna Titus family Satna Titus with her child

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here