கன்னட மொழி “தேவரு” திரைப்படத்தின் ரீமேக்கான தலைநகரம் திரைப்படம் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ் வடிவேலு நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் வடிவேலு ஒரு தலையாக காதலிப்பவரும் சுந்தர் சி ஜோடியுமான ஜோதிர்மயி அவர்களின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கேரளாவில் பிறந்த ஜோதிர்மயி மலையாள திரைப்படங்களில் அதிகம் தோன்றுபவராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து கலக்கியுள்ளார். மலேயா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் சினிமா பயணத்தை தொடங்கிய ஜோதிர்மயி ஓரிரு படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து பாவம் என்ற மலையாள படம் மூலம் பிரபலமானார். அதன் பின் பல மலையாள வெற்றிப்படங்களில் நடித்த ஜோதிர்மயி 2005-ம் ஆண்டு சிவலிங்கம் ஐ பி எஸ் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இதய திருடன் தலை நகரம் சபரி நான் அவன் இல்லை பெரியார் போன்ற சில தமிழ் படங்களில் நடித்த ஜோதிர்மயி 2009-ற்கு பின் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் மலையாள படங்கள் மட்டும் நடித்து வந்தார். 2013-ற்கு பின் மலையாள படங்களிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். 2004-ம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்த ஜோதி இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
அதன் பின் பிரபல இயக்குனர் அமல் நீராட் என்பவரை திருமணம் செய்தார். அமல் ஏற்கனவே தன் மனைவி மொட்டையடித்த படி கடந்த ஏப்ரல் மாதம் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜோதிர்மயினுடன் நஸ்ரிய எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில் நரைமுடியுடன் இருந்த ஜோதிர்மயி துளி கூட மேக் அப் இல்லாமல் பார்க்க வயதானவர் போல் இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம தலைநகரம் திரைப்படம் நடிகையா இப்படி ஆயிட்டாங்க என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.