சிறுத்தை மற்றும் சிங்கமாக வலம் வரும் கார்த்தி மற்றும் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்கள். பிரபல வின்டேஜ் நடிகர் சிவகுமாரின் மகனான இருவரும் தமிழ் சினிமாவில் நடித்து பொழுதுபோக்கியுள்ளது எக்கச்சக்கம். என்ன தான் இருவரும் அண்ணா தம்பியாகவும் இருந்தாலும் இவர்கள் இருவரும் பெரிதளவில் மக்களின் மத்தியில் வெளிப்படுத்தியதே இல்லை. இப்பொழுது கூட இவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்ப்பதே அரிது ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சூர்யா கார்த்தி அவர்களுக்கு முன்னரே திரையில் தோன்ற ஆரம்பித்த நிலையில் தனக்கு கிடைத்த வெற்றிகளுக்கு பின்னர் தனது தமிழ் கார்த்தி அவர்களையும் சினிமாவில் அறிமுகப் படுத்த ஒரு பங்காக இருந்தார். கார்த்தி அவர்களும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கதை தேர்ந்தெடுப்பதிலும் சரி நடிப்பதிலும் சரி சிறப்பாக செயல் பட்டர்.
இருவரும் சினிமாவில் புகுந்த கலக்கி வரும் நிலையில் சூர்யா நந்தா உன்னை நினைத்து மௌனம் பேசியதே காக்க காக்க பிதாமகன் பேரழகன் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அண்ணனுக்கு சலிக்காத கார்த்தியும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெவ்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றி வெற்றிபெற்றுள்ளார். முதல் படமான பருத்திவீரன் திரைப்படம் முதல் கடைசி படமான கைதி திரைப்படம் வரை அவர் நடித்த முக்கால் வாசி திரைப்படம் வெற்றியில் தான் முடிந்துள்ளது.
சூர்யா அவர்கள் அனைவரும் அறிந்த படி பிரபல தமிழ் திரைப்பட நடிகையான ஜோதிகாவை காதல் திருமணம் செய்தார். கார்த்தி குடும்பத்தில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் இருவரும் குழந்தை குட்டியுடன் தற்பொழுது கூட்டுக்குடும்பமாக சந்தோஷமான வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் கார்த்தியின் அண்ணி சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பார்க்க குண்டாக ௩௫ வயது அங்கிள் போல் தோற்றமளிக்கும் இவரா கார்த்தி என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் இப்பொழுது உடலை பராமரித்து வேற லெவலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாடர்ன் கதாபாத்திரங்கள் கிராம கதாபாத்திரங்கள் என் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும் சில நடிகர்களில் கார்த்தியும் ஒன்று.