பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆரம்பித்து 10 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இப்பொழுது தான் ஆட்டத்தில் சூடு பிடித்து வருகின்றது. முதல் வாரத்தில் பெரிதளவில் டாஸ்க் இல்லாத காரணத்தால் கொண்டாட்டமாக இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு 8 வது நாள் முதலே அதிகப்படியான டாஸ்க்கள் பெற்று அதற்கேற்ப மனஸ்தாபங்களும் உருவாகி கொண்டே வருகின்றது. அதிலும் ரியோ சுரேஷ் சண்டை நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றது.
பிக் பாஸ்ஸின் முதல் சண்டையான சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதாவின் வாக்குவாதம் பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகின்றது. இரு தரப்பினரிடமும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அனிதா அதிகமாக சுரேஷ் அவர்களிடம் சண்டை இழுப்பது போல் ரசிகர்களுக்கு தோற்றமளிக்கிறது. அனிதா சுரேஷின் பொறுமையை சோதிப்பதனால் தான் சுரேஷ் வாய் விடுவதாகவும் சில ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு வேலை அனிதா முகமூடி போட்டுள்ளாரா என்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில். அவர் தந்தை பெயர் மற்றும் புகைப்படங்களை வைத்து ஒரு கீழ் தனமான வேலை ஒன்று நடந்துள்ளது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அதில் உள்ள உண்மையை அறிந்து இதனை செய்த நபரை விமர்சனங்கள் கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
அனிதா பிக் பாஸ் வீட்டினுள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வெறுத்து வரும் நிலையில் யூடூப் சேனலில் அவருக்கு எதிரான பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில் அனிதா சம்பத் தந்தை பெயர் மற்றும் புகைப்படங்களை வைத்த ஐடி ஒன்று “அனிதா மிகவும் நல்லவர், நான் படிப்பதற்கு அவர்தான் பணம் கட்டி உதவினார்” என்று அனிதாவிற்கு முட்டு கொடுக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.
அதை உன்னிப்பாக கவனித்த ரசிகர்கள் ஐ டி யில் அனிதாவின் தந்தை புகைப்படம் மற்றும் பெயர் இருப்பதாய் கவனித்து நீங்கள் அனிதாவின் தந்தை தானே என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு நான் அவரது தந்தை அல்ல நண்பர் என்று கூறி பெயரையும் மாற்றியுள்ளார். ஒரு வேலை இந்த கீழ் தனமான செயலை அவர் தந்தையே செய்துள்ளாரா அல்லது அனிதாவின் பெயரை கெடுக்க யாரேனும் பேக் ஐ டி உருவாக்கி இதுபோல் செய்துள்ளார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கலந்துரையாடலின் பொழுது தான் கமல் ஹாசன் விமர்சித்திருந்த பொழுது தற்பொழுது இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது வேடிக்கையாக உள்ளது.