பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமெடியில் களைகட்டிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைத்த இத்திரைப்படத்தில் சத்யராஜ் மொட்டை ராஜேந்திரன் தண்டபாணி ஸ்வாமிநாதன் தவசி என பல முன்னணி காமெடி நடிகர்களும் நடித்திருத்தனர்.
அதில் சூரிக்கு தந்தையாகவும் ஜோஷியக்காராகவும் நடித்திருந்த தவசி அவர்கள் தற்பொழுது புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைப் பற்றின செய்திகள் இதுவரை பெரிதளவில் வெளிவராத நிலையில் தற்பொழுது தவசி அவர்களே புற்று நோய் சிகிச்சைக்கு பணம் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல காமெடி நடிகர் தவசி அவர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு முன்னரே பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படமே அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதிலும் அதில் இடம்பெறும் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனம் இன்னமும் பல நெட்டிசன்களால் டெம்ப்ளேட்டாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அவரது உடலமைப்புக்கும் அசராத மீசைக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்த நிலையில் அவருக்கு புற்று நோய் முற்றி உடல் இடை இளைத்து மீசையை எடுத்து பார்க்கவே மிகவும் வருந்தும் நிலையில் தற்பொழுது அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை கண்ட ரசிகர்களும் நம்ம தவசியா இப்படி ஆயிட்டாரு என மன வருத்தத்துடன் வீடீயோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த காணொளி உங்கள் பார்வைக்காகவும்!
மக்கள் பகிர்வதன் மூலம் இச்செய்தியை அறிந்த மதுரை சரவணா மருத்துவமனை உரிமையாளர் தன் மருத்துவமனையிலேயே இலவசமாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.