தான் நடித்த ஓர் இரு படங்கள் மூலமாகவே பல நடிகைகள் கனவாக நினைக்கும் எட்ட முடியாத உயரத்தை அடைந்தவர் கீர்த்தி சுரேஷ். சினிமா குடும்பத்தில் பிறந்த கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபு விக்ரம் விஜய் என பல பிரபலங்களுடன் நடித்த இவர் தற்பொழுது தன்னை விடு முன்னணியாக இருக்கும் தமிழ் பட நடிகை த்ரிஷாவை பற்றி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றியடைந்த கீர்த்தி சுரேஷ் சிலர் தான் குண்டாக இருப்பதாக விமர்சிப்பதை தவிர்க்க தற்பொழுது அதற்கேற்ப உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் அப்புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் ஒல்லியாக இருப்பது உங்களுக்கு சூட் ஆகவில்லை நீங்கள் நீங்களாக இருப்பது தான் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் 2018-ம் ஆண்டு நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் கதாநாயகியாக நடித்ததற்கு தேசிய விருது பெற்றார். இப்படி பலரும் எண்ணிட முடியாத உயரத்தை அடைந்து வரும் கீர்த்தி சுரேஷ் பிரபல தொலைக்காட்சியில் தன்னை பற்றின சுவாரசியமான விசயங்களை பகிர்ந்து வந்தார்.
அப்பொழுது த்ரிஷாவின் ரோல் மாடல் யார் என்று கேட்ட பொழுது” அவர் நடிகை த்ரிஷாவை வழிகாட்டுதலாக நினைக்கின்றதாக கூறினார். அத்தோடு நிறுத்திவிடாமல் அவரிடம் உள்ள நல்ல குணங்களை மற்றும் ஏத்துக் கொள்வேன் ஆனால் அவர் அளவுக்கு என்னால் கிளாமர் காட்டி நடிக்க முடியாது!” என்றும் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் உடலை காட்டி நடிப்பது அவர் அவர் விருப்பம் அதற்காக தன்னை விடம் அனுபவமிக்க நடிகையை இப்படி கூறி இருக்கக் கூடாது என வருத்தத்தை தெரிவித்தனர்.