நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் சினிமாவில் கோடி கட்டி பறந்தவர். அவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். அந்த ரசிகர்களை நம்பி அவர்களுக்கு நல்லது செய்ய விரும்பிய குஷ்பூ சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் மற்ற கட்சிகளால் பெரிதும் எதிர்க்கப்படும் நரேந்திர மோடியின் பா.ஜ.க கட்சியில் இணைந்தார். இணைந்தது மட்டுமின்றி தற்பொழுது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் எழுப்பி வருகின்றார்.

மற்றொரு பக்கத்தில் 1982-ம் ஆண்டு நிறுவப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளன், சமீபத்தில் மனுநூல் பற்றின கருத்தை கூறியிருந்தார். மருத்துவ ஒதுக்கீடு விவகாரத்தை பேசிய திருமாவளன் பா. ஜ. க ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாகி வருகின்றது. இந்த அவலங்களுக்கு மனுநூல் தான் காரணம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம் என்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளன் பேசி இருந்தார்.

Khushbu BJP

இதனை கவனித்த பா.ஜ.க வில் முக்கிய பதவியில் இருக்கும் குஷ்பூ திருமாவளன் பா.ஜ.க-வை பற்றி பேசியது தவறு என்றும் அவரை எதிர்த்து இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து போராட்டத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்ற குஷ்பூ பாதி வழியிலேயே போலீசாரால் மடக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பின் சமூக வலைத்தளத்தில் செய்தியை வெளியிட்ட குஷ்பூ “நாங்கள் என்றுமே பெண்களின் பாதுகாப்புக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருகின்றோம், இனியும் வருவோம்! சிலர் செய்யும் விமர்சனங்களுக்கு நாங்கள் என்றும் தலை வணங்க போவதில், கடைசி மூச்சு வரை அவர்களுக்கு எதிராக போராடுவோம்!” என்று தெரிவித்திருந்தார்.

குஷ்பூ கைது செய்யப்பட்டு தற்பொழுது காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். திருமாவளன் ஏற்கனவே பெண்களை பற்றி அவதூறாக பேசி பல முறை வழக்கில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kushboo Against Thirumavalan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here