Lakshmi menon not in part of bigg boss

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி-க்கு தொடங்க உள்ளது. இதில் யார் யார் பங்கேற்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் கண்டிப்பாக இவர் பங்கேற்க போகிறார் என்று பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் நிலையில் தற்பொழுது அவர் அதற்கு மாறாக பல்டி அடித்துள்ளார். தான் வீட்டினும் சென்று மற்றவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களையும் பயன்படுத்திய கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

தன் பள்ளி பருவத்திலேயே நடிகையாகி பெரும் உச்சத்தை தொட்டவர் லட்சுமி மேனன் இவர் தான் தற்பொழுது இந்த வரிகளை வெளியிட்டுள்ளார். கும்கி திரைப்படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன் அவர்கள் சுந்தரபாண்டியன், குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, கொம்பன், மிருதன் போன்ற வெற்றி படங்களில் நடித்து பலரும் அடைய முடியாத உச்சத்தை அடைந்தார். இவர் வேதாளம் திரைப்படத்தில் தல அஜித் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டிற்கு பின்பு பட வாய்ப்புகளை மறுத்த லட்சுமி மேனன் சில வருடங்களாக திரைப்படங்களில் தோன்றாமல் தன் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நான்கு ஆண்டுகளில் பல மாற்றங்கள் செய்த லட்சுமி மேனன் முந்தைய தோற்றத்தை விட தற்பொழுது மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார் என்றே கூற வேண்டும். இந்த நான்கு வருடங்களில் குச்சிப்புடி நடனத்தில் சிறந்து விளங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 2020-யில் கம் பேக் கொடுக்க போகும் லட்சுமி மேனன் தற்பொழுது 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தன்னை மறந்த ரசிகர்களை நினைவூட்டும் வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதை தப்பு கணக்கு போட்ட சிலர் அவர் பிக் பாஸ்ஸில் கலந்து கொள்ள போவதால் தான் ரசிகர்களின் ஆதரவை தேடுகிறார் என்ற புரளியை கிளப்பி விட்டனர்.

அதெற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று பாத்திரங்கள் கழிப்பறைகள் கழுவப்போவதில்லை கேமராக்களுக்கு முன் சண்டை போடுவதிலும் இஷ்டம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதை கண்டு பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் தன்னை கேள்வி கேற்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. எனக்கு பிக் பாஸ் பிடிக்கவில்லை அதனால் இதை கூறினேன் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் லட்சமி மேனன். அவர் பதிவிட்ட சில பதிவுகள் உங்கள் பார்வைக்காக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here