தன் பள்ளி பருவம் முதலே கதாநாயகியாக தோன்ற ஆரம்பித்த லட்சுமி மேனன் சில நாட்களாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டு விலகி தன் படிப்புகளை முடிந்த பின்னர் தற்பொழுது தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுக்க உள்ளார். சொல்லக்கூடிய அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை கொண்ட லட்சுமி மேனன் தற்பொழுது தன் கருத்தை கூறுவதாகக் கூறி மற்றவர்களை காயப்படுத்தி வருகிறார்.
சிவாஜி கணேஷன் பேரப் புள்ளையான விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன் தமிழ் ரசிகர்களால் பெரிதும் வரவேற்க பட்டார். அதன்பின் சுந்தர பாண்டியன், நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, கொம்பன், வேதாளம், மிருதன் போன்ற வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தாலும் 2016-ற்கு பின் அவருக்கு பெரிதளவில் எந்த ஒரு திரைப்படமும் அமைய வில்லை.
அதற்கிடையில் இருந்த நேரத்தை படிப்பில் செலவழித்த லட்சுமி மேனன் குச்சி புடி நடனத்திலும் வல்லவரானார். தற்பொழுது உடல் இடை எல்லாம் குறைத்து ஆளே மாறிப்போன லட்சுமி மேனன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு 2020-யில் மூன்று தமிழ் படங்கள் நடித்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் லட்சுமி மேனன் தற்பொழுது ரசிகர்களுடன் நெருக்கமாகும் வகையில் சமூக வலைத்தளங்களில் இணைந்துள்ளார். அதில் நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடும் பொழுது அவரிடம் திருமணத்தை பற்றி அவரது கருத்தை கேட்ட பொழுது திருமணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட மலம் என்று கூறி சங்கடத்தை ஏற்படுத்தினார். மேலும் தான் ஒருவரை காதலிப்பதையும் ஒப்புக்கொண்டார். இதைக்கண்ட ரசிகர்கள் கோபத்தில் உனக்கு காதல்னா இனிக்குது கல்யாணம்னா கசக்குதான்னு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருமணம் என்பது அவர் அவரது தனிப்பட்ட விருப்பம் ஆனால் மற்றவர்கள் பலரும் அதனை ஒரு வரமாக நினைக்கும் நிலையில் இவர் அதனை ஒரு மலம் என்று கூறியுள்ளது பலரையும் காயப்படுத்தி உள்ளது. மேலும் பிக் பாஸ்ஸிற்கு சென்று மற்றவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளை நான் சுத்தம் செய்ய விரும்பவில்லை என்று சர்ச்சைக்குரிய பதிவை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அப்படி துப்புரவு பணியாளர்கள் நினைத்திருந்தால் நாம் அனைவரும் சாக்கடையில் தான் மிதந்திருக்க வேண்டும். மேலும் லட்சுமி மேனன் அவர்கள் கூறி இருப்பதை பற்றி உங்கள் கருத்துக்கள் என்னவென்று பதிவிடுங்கள்!