Livingston daughter to act in serials

தற்பொழுது நேரடியாக சினிமாவில் புகுந்து அடிவாங்கி அமைதி ஆகுவதை விட சின்ன திரையில் தோன்றி குடும்ப ரசிகர்களை தன் வசம் இழுத்து அதன் பின்னர் சினிமாவில் தோற்றமளித்து வெற்றியடைவது லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளரனுமான லிவிங்ஸ்டன் மகள் இடம்பெறுவாரா? அவர் சிந்தனை திரையில் தோன்றப்போவது உறுதி தான் அதும் எந்த சீரியலில் தெரியுமா?

1980-களிலே கதை எழுத்தாளராக இருந்த லிவிங்ஸ்டன் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி அதன் பின்னர் நடிகரானார். வாலி, வானதைப்போல, என் புருஷன் குழந்தை மாதிரி, பிரியமான தோழி, M. குமரன் s/o மஹாலக்ஷ்மி, குத்து, அம்பாசமுத்திரம் அம்பானி, தில்லாலங்கடி போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து நம்மை சிரிக்க வாய்த்த லிவிங்ஸ்டன், “சொல்லாமலே” என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து நம்ம வாயடைத்து பார்க்க வைத்தார்.

ஜெசிந்தா என்பவரை திருமண செய்து கொண்ட லிவிங்ஸ்டன் அவர்களுக்கு ஜோவித்த, ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் தலை தூக்கிய பின்னர், தனது முதல் மகளான ஜோவித்த தமிழ் திரையுலகில் சீக்கிரமே தோன்ற உள்ளார் என்று ஒரு வருடத்திற்கு முதலே அறிவித்த லிவிங்ஸ்டன், அதற்கு பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. 80’ஸ் 90’ஸ் நடிகை அம்பிகாவின் மகனும் இத்திரைப்படத்தில் கதாநாயனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

அத்திரைப்படத்தை பற்றி மௌனம் காக்கும் நிலையில் ஜோவித்த தற்பொழுது சின்ன திரையில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி நெடுந்தொடரான பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றுகிறார். இதில் லிவிங்ஸ்டன் உடன் நடித்த சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோவித்த அவர்களும் தன் தந்தையை போலவே படிப்படியாக முன்னேறி உச்சத்தை தொடுவார் என ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here