Yashika boy friend

தமிழ் திரையுலகில் வளர்த்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படமான “துருவங்கள் பதினாறு” மூலம் 2016-ம் ஆண்டு அறிமுகமானார். அதில் கிடைத்த அங்கீகாரத்திற்கு பரிசாக 2018-யில் வெளிவந்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” எனும் டபுள் மீனிங் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக், விஜே ஷா ரா, வைபவி, சந்திரிகா உடன் முக்கிய கதாபாத்திரமாக தோன்றிருந்தார்.

டெல்லியில் 1999-ம் ஆண்டு பிறந்து வளர்ந்து, இன்ஸ்டாகிராம் மாடலாக புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா தமிழ் இயக்குனர்களின் கண்களில் பட்டு ஸ்டாரானார். பார்க்க மினி பட்ஜெட் சில்க் ஸ்மிதா போன்று தோற்றம் அளிக்கும் யாஷிகா தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸில் இரண்டாவது சீசனில் பங்கேற்று, அதில் சிறப்பாக விளையாடி 98 நாள் வரை பிக் பாஸ் வீட்டினுள் தாக்கு பிடித்த அவர் அதன் பின் வெளியேற்றப்பட்டார்.

தற்பொழுது விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் நிகழ்ச்சியென பல வகையில் பங்கேற்று ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கும் யாஷிகா, பிக் பாஸ் வீட்டினுள் பங்கேற்ற சக போட்டியாளரான மஹத் அவர்களுக்கு தன் இதயத்தை பறி கொடுத்ததும் ஆனால் மஹத் பிக் பாஸ் வீட்டினிருந்து வெளியேறிய பின்னர் பிரச்சி என்பவரை திருமணம் செய்து கொண்டது பெரும்பாலோனோர் அறிந்தவையே.

அதன் பின்னர் யாஷிகா அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என வதந்திகள் பரவி வந்த நிலையில் 21 வயதே ஆகும் யாசிக்க அதை மறுத்து விட்டார். ஆனால் அவர் தற்பொழுது அவர் முகம் தெரியாத நபருடன் டேட்டிங் செய்து புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களின் மத்தியில் இவர் தான் யாசிக்காவின் காதலரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னரே பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியுடன் காதல் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் இருதரப்பினர் இடையில் இருந்து எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. யாஷிகா விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக பங்கேற்ற “முரட்டு சிங்கிள்” எனும் நிகழ்ச்சியில், தான் பசங்கயுடன் சுத்துவது நண்பராக மட்டுமே அதை தவிர்த்து இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இவர் தற்பொழுது உடல் எடையை குறைத்து வருவதும் படம் வாய்ப்பை அதிகரிப்பதற்காகவே என்பதை குறிப்பிடுகிறது. ஆதலால் அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தன் இலட்சியத்தை நோக்கி செயல் பட்டு கொண்டிருக்கிறார் என்பது உறுதி என அவரது சுற்று வட்டார நண்பர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here