Losliya Mariyanesan father death

பிக் பாஸ் தமிழ் சீசன்-1 யில் ஓவியா பல இளைஞர்களுக்கும் கனவுக் கன்னியாக திகழ்ந்த நிலையில் இரண்டாவது சீசனில் அது போல் யாருமில்லை. இனி யாரும் ஓவியாவிற்கு நிகராக பிக் பாஸ்ஸில் பிரபலம் ஆக முடியாது என பலரும் தெரிவித்து வந்த நிலையில் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி 3-வது சீசனில் பங்கேற்று யாரும் அடைந்திடாத பிரபலத்தை பெற்றார்.

தற்பொழுது இலங்கை தொலைக்காட்சியில் செய்தியாளராக இருந்த லொஸ்லியா தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வரும் நிலையில் அவரது தந்தை நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்கு பிரபலங்கள் உட்பட பலரும் தங்கள் வருத்தங்களை லொஸ்லியாவிற்கு தெரிவித்து வரும் நிலையில் தன்னுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் ௩ இல் பங்கேற்ற வனிதா விஜயகுமார் தன் தந்தையின் மரணத்தை கேட்ட லொஸ்லியாவின் மன நிலையை பற்றி தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது உடலையும் வாங்க முடியாமல் தவித்துள்ளார்.

Losliya Father

லொஸ்லியாவின் தந்தை மரியானேசன் பற்றி நமக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை காரணம் பிக் பாஸ் வீட்டிலேயே பலமுறை லொஸ்லியா தன் தந்தையை பற்றி அதிகமாக பேசி நாம் கேட்டிருக்கிறோம் அதுமட்டுமின்றி அவரது தந்தையும் ஒரு முறை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தமிழ் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இலங்கையில் உள்ள தன் குடும்பத்தை விட்டு கனடாவில் பணியாற்றி வரும் மரியானேசன் காலமானதை கேட்ட லொஸ்லியா மிகவும் மனமுடைந்து அங்கேயே கதறி அழ ஆரம்பித்து விட்டாராம்.

உடனே தன் தந்தையை பார்க்க தவித்த லொஸ்லியாவிற்கு கொரோன கட்டுப்பாடுகளால் இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல அனுமதி கிடைக்காமல் தன் தந்தை உடலையும் கனடாவில் இருந்து இலங்கை கொண்டு வர முடியாமல் மிகவும் தவித்துள்ளார். அவரையும் அவரது தந்தையையும் இலங்கைக்கு கொண்டு சேர்க்க தற்பொழுது விஜய் நிறுவனம் உதவி செய்து வருவதாக வனிதா விஜய குமார் தெரிவித்துள்ளார். உடைந்து போன லோசலியாவிற்கு மன ஆறுதலாக பேசியதாகவும் வனிதா கூறியுள்ளார். சீக்கிரமே எல்லாம் சீராக ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.

Losliya Father

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here