தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வரும் நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தென் இந்திய மொழிகள் அனைத்திலும் ரசிகர்களை கொண்டுள்ளார். இது 30 படங்களுக்கு குறைவாக தெலுங்கு சினிமாவில் நடித்திருந்தாலும் இவர் தான் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராகவும் அதிகம் சம்பளம் பெரும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் கிருஷ்ணாவிற்கு 4-வது குழந்தையாக பிறந்த மகேஷ் பாபு தற்பொழுது தெலுங்கு சினிமாவில் கலக்கினாலும் அவர் பிறந்து வளந்த மண் தமிழகம் என்று கூறுவதில் தமிழராக நாம் பெருமை கொள்ளலாம். நடிகர் கார்த்தி, விஜய் போன்றவர்களுடன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்த மகேஷ் பாபு இயக்குனர் சத்தியநாத்திடம் நடிப்புகளில் உள்ள நுணக்கங்களை 2-3 மாதங்களில் கற்று தெரிந்தார்.
ஆரம்பகாலங்களில் தெலுங்கு மொழி பேச திணறிய மகேஷ் பாபு திரைப்படங்களில் மணப்பாடம் செய்தே ஒப்பித்து வந்தார் அதன் பின் தெலுங்குவில் ஒரு அளவிற்கு தேர்ந்த மகேஷ் பாபு 1999-ம் ஆண்டு ராஜா குமாரோடு என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பு மகேஷ் பாபு 5-ற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தன் முதல் படத்திற்கு பின் தொடர் வெற்றி படங்களை கொடுத்த மகேஷ் பாபு அவர்களின் ரசிகர்களும் அதிகமானர். பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ் பாபு தற்பொழுது ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 20 கோடி. அதே சமயம் விளம்பரங்களிலும் நடித்து வரும் மகேஷ் பாபு சமீபத்தில் நடித்த 30 வினாடி விளம்பரத்திற்கு திரைப்பட சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் வாங்கி உள்ளார்.
அவர் விளம்பரத்திற்கு பெரும் சம்பளம் 25-30 கோடி என செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. 2.30 மணி நேரத்துக்கு 20 கோடி 30 வினாடிக்கு 25 கோடி என்னடா உங்க ஞாயம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.