தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை .அப்படி இருக்க தமிழில் கொடிகட்டி பறந்தவர்களில் ஒருவரான வைகை புயல் வடிவேலு பற்றி சொல்லவே தேவையேயில்லை.அவ்வாறு இருக்க பல தமிழ் படங்களில் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.மேலும் இவர் நடித்த காமெடிகளில் ஒன்றான படத்தில் வரும் காமெடியான மண்டபத்திரம் என்றதை பார்க்காதவர் யாருமே இருக்கமாட்டார்கள்.மேலும் மீம் கிரியேட்டர்களுக்கு அதிகம் பயன்படும் ஒரு மீம்ஸ் template அது என்று சொல்லலாம்.
அதில் என் மச்சினிச்சி இடம் பேசுவேன் கொஞ்சுவேன் அதை எவண்டா கேட்பது என்று நம்மை சிரிக்க வைத்து அதிக காமெடி கட்சிகளில் நடித்தவர் தான் சக்திவேல்.இவர் சமீபத்தில் இண்டர்வ்யூ ஒன்று கொடுத்துள்ளார்.அதில் அவர் மனம் திறந்து பல சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பரிமாறியுள்ளார்.
நான் 9th 10th படிக்கும் பொது வாலிபால் பிளேயர்ராக மாறி அப்படியே டிஸ்ட்ரிக் டிவிஷனில் என்ன போயிட்டு வந்தேன்.அதேபோல 11th படிக்கும் போது ஸ்டேட் செலக்சன் நடந்த போது அதற்கு சென்றிருந்தேன்.மேலும் அதில் செலக்ட் ஆகி 11th 12th படிக்கும் போது ஸ்டேட் மேட்ச் விளையாட செண்டிருந்தேன்.அதன் பின்பு ஸ்போர்ட்ஸ் கோட்ட மூலம் காலேஜ் கும் சேர்ந்தேன் மேலும் காலேஜ் படிப்பை முடித்தேன்.இன்கம் டேக்ஸ் ஆப் இந்தியாவும் அவர்கள் வந்து போரம் ஐ ஸ்போட்ஸ் கோட்ட மூலமாக நிரப்ப சொல்லி ஜயின் பண்ண சொன்னங்க அப்படியாக தான் நான் அரசு பணியில் சேர்ந்தேன்.
அவரது சினிமா வாழ்க்கை.அப்போது சத்யராஜ் அவர்கள் எனது ஆபிஸ் வழியாக வந்தார்,அப்போது நான் சென்று அவரிடம் பேசினேன்.நீங்க அரசு அதிகாரி தான் என்று கேட்டார் ஆமா சார் என்று சொன்னேன்.பிறகு சினிமா பட வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன்.மேலும் அப்படியே கிராமத்து மின்னலே என்ற படத்தில் ரேவதியுடன் டயலாக் பேசி நடித்தேன்.அப்படி ஆரம்பித்தது தான் எனது சினிமா வாழ்க்கை மேலும் சண்டை காட்சிகளில் நடித்த பின்பு டயலாக் காட்சிகள் இல்லாமல் வெறும் சண்டை காட்சிகளில் மட்டுமே நடிப்பேன் என்று அவர்கள் நினைத்து என்னை சண்டை கதாப்பாத்திரத்திற்கு மட்டுமே என்னை கூப்டார்கள்.சத்யராஜிற்கும் எனக்கும் ஒரு சோலோவாக சண்டை காட்சி ஒன்று இருந்தது அதில் கை கால்கள் அனைத்திலும் அடி வாங்கி பின்பு அசிஸ்டன்ட் டைரக்டர்கள் அழைத்து சென்று உதவினார்கள்.அதேபோல அடிவாங்கி அடிவாங்கி தான் சண்டை காட்சிகளில் சண்டை போட தெரியாமல் பழகி கொண்டேன்.
சண்டையில் இருந்து காமெடியனாக மாறினேன் சில காலம் படங்கள் நடிக்காமல் இருந்தேன்.அதன் பிறகு ஜிம்மில் சேர்ந்தேன்.அப்போது சுந்தர்.சியும் அதில் இருந்தார் என்னை நலம் விசாரித்தார்.பின்பு இரண்டு ஒரு படம் உள்ளது.அதில் வடிவேலுக்கு காம்போவாக காமெடி சீன் இருக்கும் அதில் நடிகரீர்களா என்று கேட்டார்.நான் உடனே சும்மா தான் சார் இருக்கிறேன்.பின்பு வடிவேலுடன் நடித்த அந்த காமெடி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.அதில் இருந்து அனைவர்க்கும் பிடித்த நடிகராக சினிமா வாழ்க்கையை நடத்தி சென்றேன்.மேலும் அப்படியே காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன் என கூறி முடித்தார்.