தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் இந்த ஆண்டு 2020-யில் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் மாஸ்டர் திரைப்படமும் ஒன்று. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோஹனன் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருந்தாலும் கொரோனா ஊரடங்கால் திரையரங்களில் வெளியிட முடியாமல் தாமதமாகி வருகின்றது.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ஹிட்டாகி உள்ள நிலையில் படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்து காத்து துவண்டு போய் உள்ளனர். அப்படி துவண்டு போன ரசிகர்களுக்கு தன் புகைப்படங்கள் மூலம் மாஸ்டர் திரைப்பட நடிகை மாளவிகா மோஹனன் புத்துணர்ச்சி அளித்து வருகிறார் என்றால் கூற வேண்டும்.
கேரளத்து கிளியான மாளவிகா இதுவரை தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அளவிடவே முடியாது காரணம் அவர் நடித்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவின் தூண்களான ரஜினிகாந்த் மற்றும் விஜயின் திரைப்படங்கள். 2019 வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா பூங்கொடியாக நடித்திருந்தார்.
பொங்கொடியாகவே ரசிகர்கள் பலரின் மனதை வென்ற மாளவிகா தற்பொழுது விஜயுடன் ஜோடி சேர போகிறார் என்ற அறிவித்த உடனே அவரது ரசிகர் பட்டாளம் இருமடங்காக மாறியது. அதுமட்டுமின்றி அவரது அன்றாட செயல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் மாளவிகா தற்பொழுது இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அப்புகைப்படத்தை கண்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.