பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை கடந்த நிலையில் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் பலரது முகங்களும் பிக் பாஸ் வீட்டினுள் கிழிகறதோ இல்லையோ வெளியில் கிழிந்து வருகின்றது. அப்படி அதில் பங்கேற்றுள்ள நடிகர் ஆரி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது செய்த செயல் சக நடிகரான டேனியல் போப்பை மிகவும் பாதித்துள்ளது.

தமிழர்கள் வரலாற்றிலேயே மறக்க முடியாத நிகழ்வு என்னவென்றால் ஜல்லிக்கட்டு தான். நமது நாட்டு மாடுகளை காக்க கிராமப்புறமிலிருந்து நகரப்புறம் வரையில் அனைவருமே கை கோர்த்து ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வாய்த்த கனம் அது. அந்தவகையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் நிகழ்வுக்கும் ஆதரவளிக்கும் ஆரி இதற்கும் தன் நண்பர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

Jallikattu Protest

அப்போராட்டத்தில் ஆரியுடன் டேனியல் போப்பும் ஈடுபட்டிருந்தார். அப்படி ஈடுபடுக்கையில் ஆரி தன்னுடன் இருந்த சக பிரபலங்களையும் தொலைக்காட்சி பேட்டி கொடுக்க வேண்டாம் எனவும் அப்படி கொடுத்தால் இந்த போராட்டம் வழி மாறிப் போகவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அதற்கு உடன் பட்ட அவரது நண்பர்கள் பேட்டிகளை மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடைசியில் பார்த்தால் அறிவுரை கூறிய நடிகர் ஆரி அவர்களே 20 மைக் வைத்து பேட்டியளித்துள்ளார். இதைக்கண்டு வெறுத்து போன டேனியல் ஆரியிடம் இச்சம்பத்தை பற்றி கேட்ட பொழுது “யாரவது ஒருவர் வழி நடந்த வேண்டும் என்பதால் தான் நான் இதைச் செய்தேன்” என்று ஆரி கூறியுள்ளார். அது டேனியலுக்கும் சரியாக பட்டதால் அந்த பிரச்சனையை அப்படியே முடித்து கொண்டதாகவும் டேனியல் கூறியுள்ளார்.

அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை போல் ஆரி பிக் பாஸ் வீட்டிலும் மற்றவர்களை வைத்து இவர் ஸ்கோர் பண்ணுவதாக டேனியல் சந்தேகப்படுகிறார். அவர் பேசிய காணொளி உங்கள் பார்வைக்காக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here