தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே பற்றின அறிமுகம் பெரிதளவில் தேவையே இல்லை. காரணம், பல முன்னணி நடிகைகள் ஜோடி சேர்ந்து நடிக்க ஏங்கி காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடி சேர்ந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தார். அப்பெரும் பாக்கியத்தை பெற்ற ராதிகா நடிப்பதில் கவனம் செலுத்தாமல் ஏன் திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வியை தொடர்ச்சியாக பலரும் அவரிடம் கேட்டு வந்தனர். அதற்கு தற்பொழுது ராதிகா மனம் திறந்துள்ளார்.
தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா பாலிவுட் சினிமாவில் கலக்கி வருபவர். 2005-ம் ஆண்டு ஹிந்தி மொழியில் முதன் முதலாக அறிமுகமான ராதிகா 7 ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடித்து இயக்கிய “தோனி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் தென்னிந்தியா மொழிகளை விட வட இந்திய மொழிகளில் அதிகம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தோனி திரைப்படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் இடைவேளை விட்டு நடித்து வந்த ராதிகாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க “கபாலி” திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ராதிகாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அதில் பிரிந்த இருவரும் ஜோடி சேர்வது போல் எடுத்திருந்த காட்சி மக்களின் மனதை வென்ற ஒன்று.
35 வயதாகவும் ராதிகா தனது 28 வயதில் இங்கிலாந்த்தை சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்ற பாடகரை 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் தனது சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த அடிக்கடி பயணித்து வருகின்றார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பொழுது தொகுப்பாளர் அவரது திருமணத்தை பற்றி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராதிகா “எனக்கு முதலில் திருமணத்தை பன்றின தோன்றலே இல்லை. ஆனால், டெய்லர் என்னிடம் திருமணத்தை பற்றி கேட்ட பொழுது அவரை திருமணம் செய்து கொண்டால் எனக்கு சுலபமாக பிரிட்டிஷ் விசா கிடைக்கும் என்று தோன்றியது. அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்” என பதில் அளித்தார். விசாவுக்காக வெள்ளைக்காரன் கிட்ட வாழ்க்கையே கொடுத்துடையே ராதிகா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.