கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் தமிழ் மொழியில் இது வரை ஒரு திரைப்படம் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ப்ரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுபமாவிற்கு தற்பொழுது பல மொழிகளில் வாய்ப்பு கிடைத்து வருகின்றது தற்பொழுது க்ளாமரிலும் இறங்கி வரும் அனுபமா சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
நிவின் பாலி, மடோனா செபேஸ்டின், சாய் பல்லவி போன்ற பிரபலங்கள் நடித்த “ப்ரேமம்” திரைப்படம் மூலம் 2015-ம் ஆண்டு இந்திய சினிமாவில் அறிமுகமான அனுபமாவிற்கு முதல் திரைப்படமே வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அந்த வெற்றி அவருக்கு அடுத்த ஆண்டே 4 படங்களில் 2 புது மொழிகளில் டேபுட் செய்யும் அளவிற்கு மிக பெரிய வெற்றியாக அமைந்தது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த கொடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுபமா திரைபடத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். தனுஷ் கொடி திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றோரு வேடத்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார்.
கொடி திரைப்படமும் அனுபமாவிற்கு ஹிட் கொடுத்த நிலையில் அனுபமா தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையானார். சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவ்வாக இருக்கும் அனுபமாவிற்கு அவர் வெளியிடும் புகைப்படங்களுக்குகெனவே தனி ரசிகர் பட்டம் உண்டு அப்படி அனுபமா சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்புறம் திரும்பிய படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அழகுக்கு அழகு சேர்க்கும் அவரது சுருட்டை முடிகளை தூக்கியபடி கை மற்றும் கால்கள் தெரியும் படி ஒரு அளவிற்கு க்ளாமர் புகைப்படத்தை பதிவு செய்த அனுபமா அத்தோடு நிறுத்திவிடாமல் “அழகிய சுருட்டை முடிகளை கண்டு என்னை ரசிப்பவர்கள் தான் என் மீது காதல் கொண்டவர்கள். என் கால் மற்றும் கைகளை அல்ல!!
மேலும், என் கை கால்கள் தான் உங்களின் கண்களை ஈரத்தால் என்னை விட்டு விலகிவிடுங்கள் சகோதர்கள் மற்றும் சகோதரிகளே” என்று பதிவிட்டிருந்தார். ஒரு அழகை கண்டு ரசிப்பதனால் அதில் என்ன தவறு இருக்கின்றது இருபால் கடவுள் உருவாக்கியதே மற்ற பாலின் மீது ஈர்ப்பு கொள்ள தான் என ரசிகர்கள் பலரும் அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.