Meera mithun opens about sanam

2016-ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தை வென்ற இலங்கையை சேர்ந்த சனம் ஷெட்டி அவர்கள் தற்பொழுது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். பிக் பாஸ் வீட்டின் அதிகப்படியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் மட்டுமின்றி அதற்கு முன்னரே பிக் பாஸ் புகழ் தர்ஷனுடன் சில சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த சீனில் பங்கேற்ற தர்ஷனே சனம் ஷெட்டியை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சனம் உடன் கருத்து வேறுபாடுகளால் பிரிந்ததாக செய்திகள் வெளிவந்தன அதை உறுதி செய்யும் படி சனமும் தர்சன் தன்னை ஏமாற்றியதாக போலீஸில் புகார் தெரிவித்தார்.

Sanam And Darshan

அதன் மூலம் விளம்பரம் கிடைத்த சனத்திற்கு பிக் பாஸ்ஸில் பங்குபெற வாய்ப்பும் கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சனம் அவர்களும் பிக் பாஸ்ஸில் விளையாண்டு வருகிறார். அவர் செய்யும் சில செயல்கள் பிடிக்காத ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர் ஒரு சிலர் அவர் செய்வது சரி தான் என பாராட்டியும் வருகின்றனர்.

இப்படி இரண்டு பக்கமும் இல்லாமல் நடுவில் விமர்சனங்களை பெற்று வரும் சனம் அவர்களை பற்றின சூடான செய்தி ஒன்றை மீரா மிதுன் தன சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் சனம் ஷெட்டி ஏற்கனவே தன்னுடன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த அஜய் என்பவரை காதலித்தாகவும் அதன் பின்னர் காதல் தோல்வியினால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சனம் ஷெட்டி மேல் மீரா மிதுன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

முதலில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் மீரா மிதுனுக்கு கொடுத்து அதன் பின்னர் அவரிடம் இருந்து பறித்து சனத்திடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த விரோதத்தின் காரணமாக கூட மீரா மிதுன் இதுபோன்ற போலியான செய்திகளை வெளியிடலாம் என சனம் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது பதிவு கீழ் கண்டவற்றில்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here