பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமின்றி தெலுங்குவிலும் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. தமிழ் போலவே 16 போட்டியாளர்களை கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி ஆரம்பித்த இந்நிகழ்ச்சி 6 வாரங்களை கடந்து வைல்ட் கார்டு என்ட்ரி உட்பட 12 போட்டியாளர்களை கொண்டு தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து வருகின்றது.

தமிழில் கமல் ஹாசன் போலவே தெலுங்குவில் மிகவும் பிரபலமான நடிகர் நாகார்ஜூனா கடந்த மூன்று சீசன்களாக பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4-யும் கடந்த 6 வாரங்களாக தொகுத்து வழங்கி வந்த நாகார்ஜூனா தற்பொழுது படப்பிடிப்பின் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

Nagarjuna in Bigg Boss

நாகர்ஜூனாவின் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படமான “வைல்ட் டாக்” என்ற திரைப்படத்தில் நாகார்ஜூனா பிஸியாக உள்ளதால் 7-வது வாரம் மட்டும் அவருக்கு பதில் அவரது மருமகள் சமந்தா தொகுப்பாளராக பங்கேற்பார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது.அதன்படி, நேற்று வேற லெவல் என்ட்ரியில் அறிமுகமான சமந்தா தன்னை தொகுப்பாளராக போட்டியாளர்களிடம் அறிமுகம் செய்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்றுள்ள ப்ரோமோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதைக்கண்ட தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் அந்த எபிசோடை காண ஆர்வமாக உள்ளனர். நாகார்ஜூனா மீண்டும் நிகழ்ச்சியில் இணையும் வரை சமந்தா தான் தொகுப்பாளர் என்ற செய்தி உறுதியாகி உள்ளது. சமந்தா என்ட்ரி கொடுத்த ப்ரோமோ உங்கள் பார்வைக்காக!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here