Selvaraghavan blessed with third child

பாலிவுட் நடிகை கரீனா கபூர் முதல் கோலிவுட் நடிகர் கார்த்தி வரை பலரும் இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கென ஒரு புதிய நபரை குடும்பத்தில் பெற்றெடுத்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மனைவியும் மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கும் செய்தி தற்பொழுது வெளிவந்துள்ளது.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன் தான் இப்பொழுது அப்பாவாக போகிறார். தன் சொந்த தம்பி தனுஷை வைத்து திரைப்படம் இயக்க தொடங்கிய செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு இயக்குனராக அறிமுகமானார். 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என் ஜி கே உள்ளிட்ட வெற்றிப்படங்களை எடுத்துள்ள செல்வராகவன் இதுவரை தமிழ் சினிமாவில் பிளாப் திரைப்படங்களே கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.

Selvaraghavan and his wife

தன்னுடன் முதல் மூன்று திரைப்படங்களில் நடித்து சோனியால் அகர்வாலும் செல்வராகவனும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்த இத்தம்பதியினர் 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பின், தன்னுடன் “மயக்கம் என்ன” திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை 2011-ம் வாழ்க்கை துணையாகவும் தேர்ந்தெடுத்தார்.

தங்களது குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த செல்வராகவன்-கீதாதாஞ்சலி தம்பதியினருக்கு லீலாவதி என்ற 8 வயது மகளும் ஓம்கார் என்ற 7 வயது மகனும் உள்ளனர். குடும்பத்துடன் சந்தோமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி தற்பொழுது தங்களது 3 வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளனர். சமீபத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் இத்தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Selvaraghavan WifeSelvaraghavan Family

 

View this post on Instagram

 

A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here