1990 மற்றும் 2000 தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் சிலர் தங்களது மார்க்கெட் குறைந்த பின் துணை கதாபாத்திரங்களில் தோன்றி தங்களது தோற்றத்தை வெளிப்படுத்தி கொண்டே இருக்கின்றனர் ஆனால் பலரும் மார்க்கெட் குறைந்த பின் ஆள் அடையாளமே தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வெளி நாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். அப்படி மார்க்கெட் குறைந்த பின் காணாமல் போன மாளவிகா அவர்கள் சமீபத்தில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்த சுவேதா கொன்னுரு என்கின்ற மாளவிகா 1999- ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த “உன்னைத் தேடி” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் இதய முரளி, விஜய், சூர்யா என பல பிரபலங்களுடன் நடித்த மாளவிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடா மொழிகளிலும் ஒரு சில படங்கள் நடித்தார்.

Malavika Menon

ரோஜாவனம், சீனு, வசூல் ராஜா எம் பி பி எஸ், அய்யா, சந்திரமுகி, திருட்டு பயலே, நான் அவன் இல்லை, குருவி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்த மாளவிகா ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த பின்னர் 2009-ம் சினிமாவை விட்டு முழுவதுமாக வெளியேறினார். இவருக்கு மசாலா கதாபாத்திரங்களிலும் அதிக டிமாண்ட் இருந்தது குறிப்பிடத்தக்கது.

41 வயதான மாளவிகா கடந்த 2007-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆன பின்னர் பல ஆண்டுகளாக மீடியாக்களின் கண்ணில் சிக்காமல் இருந்தார். ஆனால் தற்பொழுது அவரது புகைப்படங்கள் வெளியாகி மக்களின் மத்தியில் வைரலாகி வருகின்ற நிலையில் பலரது கண்ணும் அவர் மீது திரும்பியுள்ளது. இப்புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு இன்னும் வயசாகவே இல்ல இப்போ கூட அவங்க துணை கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Malavika Menon Malavika Menon Malavika Menon Malavika MenonMalavika Menon

 

View this post on Instagram

#yogaeveryday #loveyoga❤️ #grateful @sheetaltewariyoga #thankyou

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here