தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. ரசிகர்களுக்கும் பட வாய்ப்புகளுக்கும் பஞ்சமே இல்லாத விஜய் அவர்கள் இதுவரை 63-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 30 ற்கும் மேற்பட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அடைந்துள்ளது. வசூல் மன்னனான விஜய் அவர்களின் 65 வது திரைப்படத்திற்கு தற்பொழுது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் அவர்களுக்கு எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி திரைப்படம் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அதன்பின் பல வெற்றிப்படங்களில் கொடுத்த விஜய் அடுத்த லெவெலுக்கு செல்ல எ ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் உதவியது.

Vijay and A R Murugadoss Movies

விஜய் எ ஆர் முருகதாஸ் சேர்ந்தாலே ஹிட் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிய இந்த காம்போ சன் பிக்டர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டன ஆனால் தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் எ ஆர் முருகதாஸ் கதையில் அதிகப்படியான அரசியல் உள்ளதால் அதை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் எ ஆர் முருகதாஸ் தளபதியின் 65 வது திரைப்படத்திலிருந்து விலகி உள்ளாரென சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.

அப்படி எ ஆர் முருகதாஸ் விலகி இருந்தால் தளபதியின் ௬௫ வது திரைப்படம் யார் எடுப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. கதையுடன் காத்திருக்கும் வெற்றிமாறனா சுதா கங்கோராவா அல்ல மகிழ் திருமேனியா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதை பற்றின செய்திகள் சீக்கிரமே வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் இயக்கிய விஜயின் மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாகி வருவதை நினைத்து வருந்தி வரும் ரசிகர்களுக்கு வெற்றி இயக்குனர் எ ஆர் முருகதாஸ் அவர்களும் விஜய் திரைப்படத்தில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களுக்கு மிக பெரிய கவலையாக அமைத்துள்ளது. இதைப் பற்றின உங்கள் கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும்!

Vijay and A R Murugadoss

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here