விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்புகளை எடுத்து விவாதம் செய்யும் இந்நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அதன் தொகுப்பாளரான கோபி நாத் அவர்களை கோட்-சூட் உடையிலேயே பார்த்த நாம் இதுவரை மாடர்ன் உடையில் பார்த்ததுண்டா?
நீயா நானா நிகழ்ச்சி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமையும் கோபிநாத் அவர்களுக்கு கோட் கோபி என்ற பட்ட பெயரே உள்ளது காரணம் கோட்-சூட் அணிவதற்கான பக்காவான பொருத்தங்களை கொண்ட கோபிநாத் இதுவரை நீயா நானா நிகழ்ச்சிக்கு கோட்-சூட் அணியாமல் வந்ததே இல்லை. அதனாலேயே மக்களின் மத்தியில் அவருக்கு இந்த பெயர்.
முதலில் யூ டிவி மூலம் தொகுப்பாளர் பயணத்தை தொடர்ந்த கோபிநாத் அவர்கள் பல கடினங்கள் மற்றும் உழைப்பிற்கு பின்னர் விஜய் நிறுவனத்தில் சேர்ந்தார். “மக்கள் யார் பக்கம்” என்ற அரசியலை பற்றின நிகழ்ச்சியை தொகுத்து வந்த கோபி அதன் பின்னர் “நீயா நானா” நிகழ்ச்சியில் தொகுக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மாடர்ன் பட்டிமன்றமான நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பாக செயலாற்றி தன் இடத்தை பத்து ஆண்டுகளுக்கு மேல் தக்கவைத்து வருகின்றார்.
ரியாலிட்டி ஷோவன இந்நிகழ்ச்சியில் இரு சூடான தலைப்புகள் கொடுத்து இருதரப்பினரிடமும் இருந்து கருத்துக்கள் கேட்கப்படும் அதில் இவர்கள் இருவருக்கும் ஒரு பாலமாக அமையும் கோபிநாத் தற்பொழுது தன் சமூக வலைத்தளத்தில் மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பலரும் இதுவரை அவரை மாடர்ன் உடையில் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த புகைப்படங்கள் மக்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது.